என்னுடைய அழகிற்கும் இளமைக்கும் காரணம்! ரகசியம் உடைத்த டிடியின் அக்கா
பிரபல சின்னத்திரை நடிகையும் பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்காவுமான பிரியதர்ஷினி தன்னுடை அழகின் இரகசியத்தை போட்டுடைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகைகளின் அழகு
பொதுவாக நாம் சீரியல்களில் பார்க்கும் நடிகர் மற்றும் நடிகைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நம்மை கவரும் வகையிலும் இருப்பார்கள்.
இதனை பார்த்த நம்மில் சிலர் இவர்களது அழகின் ரகசியம் குறித்து சிந்தித்திருப்போம்.
இந்த பதிவில் பிரபல சீரியல் நடிகை பிரியதர்ஷினி சில டிப்ஸ்களை கூறியிருக்கிறார்.
இதன்படி, பிரியதர்ஷினி ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார், தற்போது இவருக்கு 44 வயதாகிறது, ஆனாலும் எதிர்நீச்சல் சீரியல் இவரின் அழகு மக்களால் பாரியளவில் வரவேற்கப்படுகிறது.
இளமைக்கான சீக்ரட்டை போட்டுடைத்த பிரியதர்ஷினி
அதில்,“ முதலில் என்ன வேலை இருந்தாலும் உங்கள் முகத்தை நீங்கள் பத்திரமாக பார்த்தக் கொள்ள வேண்டும். முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் காரணம் என்ன தெரியுமா?
நம்முடைய முகம் முதலில் இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும். ஆகையால் இதனை எதாவது ஒரு வழியில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் இரவு நாம் படுக்கும் முன்னர் சில நைட் கீரிம்கள் பாவிக்கலாம். ஆனால் இது அவசியம் என்று ஒன்றும் இல்லை.
இருப்பவர்கள் பாவணைக்கு எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து அண்டர் ஐ டார்க் சர்க்கிள் ஐ கிரீம் பொருத்தவரை கம்மியா தான் யூஸ் பண்ணனும். இந்த பிரச்சினை மிகவும் கையாள வேண்டும். தொடர்ந்து நான் இரண்டு நாட்களுக்கு ஒரு நாள் தான் ஃகீரிம்கள் பாவணைக்கு எடுத்துக் கொள்வேன்.
எனது சருமத்தை பொருத்தவரை என்னுடைய அழகை தேங்காய் எண்ணெய் தான் பாதுகாக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய் நான் மேக்கப் ரீமுவராகவும் பயன்படுத்துவேன். இது மட்டுமன்றி நான் முகத்திற்கு பயன்படுத்தும் பவுன்டேசனுடன் ஒரு துளி சேர்த்துக் கொள்வேன்.
தேங்காய் எண்ணெய் டிப்ஸ்
தேங்காய் எண்ணெய் கூட லாவண்டர், ஆரஞ்சு, லெமன், பிரஸ் பெப்பர்மென்ட் ஆயில், ஜெரனியம், ஒரிகனா ஆயில் ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்து முகத்திற்கு ஆப்ளை செய்து சுமார் 20- 25 நிமிடங்கள் வைத்து விட்டு கழுவுவேன்.
இதனால் தான் இவ்வளவு அழகாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.