நடனம் ஆடும்போது திடீரென மயங்கி விழுந்த கலைஞர்! மேடையிலேயே உயிரிழந்த பரிதாபம்
மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸ் மேடையிலேயே உயிரிழந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மாரியம்மன் கோயில் விழா
மதுரையின் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா நடைபெறும்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழாவில் பாரம்பரிய கலைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடமும் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கொண்டாட்டங்கள் களைகட்டின.
பரதநாட்டிய விழாவில் நடந்த சோகம்
இந்த விழாவில் பிரபல பரதநாட்டிய கலைஞரான காளிதாஸ், அவருடைய சீடர்களுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சை பிடித்தபடி காளிதாஸ் சரிந்துவிழ, அனைவரும் பதறித்துடித்தனர்.
அவரது அருகில் சென்று பார்த்தபோது, நெஞ்சு வலியால் மேடையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
யார் இந்த காளிதாஸ்?
54 வயதான காளிதாஸ் இளம் வயதிலேயே நாட்டியம் மீது ஆர்வம் கொண்டவர். ஒரு நாட்டியப் பள்ளியையும் அவர் நடத்தி வருகிறார்.
அவரது மகன் விஷ்வ ஹர்ஷன் மிருதங்க வித்துவானாகவும் மகள் பிரியதர்ஷினி பரதநாட்டியக் கலைஞராகவும் மனைவி பானுமதி கர்நாடக சங்கீத ஆசிரியையாகவும் இருக்கின்றனர்.
கலைக்காக உழைத்துவரும் இந்த குடும்பத்தில் தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த சோகம் அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.
’ஆடல் வல்லான்’ என்ற விருது, ’கெளரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு குறித்த இந்த விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்