என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இரவில் தூங்கும் போது இதை கண்டிப்பா செய்திடுங்க
முக சுருக்கத்தை போக்குவதற்கு இன்று பலரும் விலையுயர்ந்த கிரீம்களை பயன்படுத்தி வரும் நிலையில், தேங்காய் எண்ணெய் இதற்கு சரியான தீர்வு அளிக்கின்றது.
முதுமையை கொடுக்கும் முகச்சுருக்கம்
பொதுவாக ஆரம்பத்தில் முக சுருக்கத்தினை கவனித்துக் கொண்டால் வயதான தோற்றத்தை தடுக்கலாம். தோல், நெற்றியில் சுருக்கம், கண்களுக்கு கீழ் கரும்புள்ளிகள் வயதாவதன் அறிகுறியாகும்.
சன் ஸ்கிரீன் இல்லாமல் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் புகைப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு இவைகளும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.
சருமத்தின் சுருக்கத்தை போக்குவதற்கு விலையுயர்ந்த கிரீமை பயன்படுத்தாமல் தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் போதும்.
தேங்காய் எண்ணெய்யின் பயன்கள்
தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கி, கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை மென்மையாக வைத்திருக்கின்றது.
தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யும் மசாஜ் முக சுருக்கம் இல்லாமல் இறுக்கமாக்குகின்றது.
வறண்ட சருமமும் முகத்தின் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகின்றது.
இரவில் படுக்கும் முன்பு சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை எடுத்து தோலில் நன்றாக மசாஜ் செய்யவும், எண்ணெய் சருமத்தில் முழுவதுமாக உறிஞ்சும் வரை மசாஜ் செய்து, பின்பு ஈரமான துணியால் முகத்தை துடைக்கவும்.
கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்
இதில் 3 துளி தேங்காயுடன் 2 சொட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து முகத்தில் தடவலாம். இரவில் படுக்கும் முன் இதைச் செய்தால் சருமம் மிகவும் மென்மையாக மாறும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்யவும். இதை தினமும் இரவில் தூங்கும் முன் செய்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |