சுவையான சேமியா தேங்காய் பால் புலாவ்! அதில் இதை மட்டும் சேர்க்காதீங்க
பொதுவாக குழந்தைகளுக்கு சேமியா வைத்து செய்யப்படும் உணவுகள் என்றால் அதிகம் பிடிக்கும்.
சேமியாவின் வடிவம் அவர்களுக்கு உணவை சாப்பிட வேண்டும் என்ற ஈர்ப்பை உண்டாக்கும்.
இதன்படி, சேமியாவை வைத்து பால் பாயாசம், கருப்பட்டி பாயாசம், சேமியா பிரட்டல் உள்ளிட்ட உணவுகளை தயாரிக்கலாம்.
அந்தவகையில் சேமியா தேங்காய் பால் புலாவ் எவ்வாறு தயாரிப்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 200 கிராம்
நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்
பச்சைப்பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவையானளவு
தாளிப்புக்கான பொருட்கள்
பட்டை - 1 துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா 2
கடல்பாசி - சிறிது
நெய், எண்ணெய் -தேவை ஏற்பட்டால் மாத்திரம்
தயாரிப்புமுறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி இளம் சூட்டில் கொதிக்க விட வேண்டும். இதன்பின்னர் அதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் இறக்க வேண்டும்.
வெந்ததும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை தொடர்ந்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
வாசனை மூக்கை துளைக்கும் போது வெங்காயத்தை சேர்த்து ஒரு 5 நிமிடங்களில் இஞ்சி பூண்டு விழுது, மற்றும் வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்க வேண்டும். இவ்வாறு கிளறிக் கொண்டிருக்கும் போது வெங்காயம் பொன்னிறமாக வதங்கியிருக்கும் அதில் பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனையடுத்து தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து குழம்பு பதத்திற்கு வரும் போது சேமியாவை அதனுடன் சேர்த்து கிளறி, மூடி சேமியாக உதிரியாக வரும் போது மேலோட்டமாக கொத்தமல்லி தூவி இறக்கினால் ஆவலுடன் எதிர்பார்த்த தேங்காய் பால் புலாவ் தயார்!