ஊரே மணக்கும் தேங்காய் பால் இறால் பிரியாணி... ஈஸியாக செய்வது எப்படி?
கடல் உணவுகளில் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் இறால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரியம். தற்போது தேங்காய் பால் சேர்த்து வித்யாசமான சுவையில் வீடே மணக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இறால் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசி பூ
வெங்காயம் - 4 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது
தண்ணீர் – தேவையான அளவு
மசாலா விழுதுக்கு தேவையான பொருட்கள்
பூண்டு - 12 பற்கள்
இஞ்சி - 2 இன்ச் துண்டு நறுக்கியது
சின்ன வெங்காயம் - 10
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 5
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். மற்றொரு புறம் இறாலை நடுவில் இருக்கும் நரம்பினை எடுத்து மஞசள் தூள் போட்டு சுத்தப்படுத்த, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் கலந்து ஊற வைக்கவும்.
மிக்ஸியில் விழுது அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து தனியாக தேங்காயை அரைத்து, பிரியாணிக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பொன்னிறமாக வந்ததும், அரைத்த மசாலா விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வதங்கியதும், உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி பின்பு ஊற வைத்த இறாலையும் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு குறைந்த தீயில் வைத்து தேங்காய் பாலை ஊற்றி கிளறிய பின், ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
பின்பு மூடிவைத்து 8 நிமிடம் வேகவைத்து இறக்கவும். இறக்கிய பின்பு மல்லித்தழை, வறுத்த முந்திரி மற்றும் நொய் இவற்றினை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |