தேங்காய் உடையும் பலன்கள் பற்றி தெரியுமா? இப்படி உடைந்தால் தீராத செல்வம் பெருகுமாம்
பொதுவாகவே இந்து சாத்திரத்தில் பண்டிகைகள், முக்கிய விரதநாட்கள் அல்லது விசேட நிகழ்வுகளின் போது தேங்காய் உடைக்கப்படுவது வழக்கம். தெய்வ வழிப்பாட்டிலும் தேங்காய் உடைக்கும் நிகழ்வு முக்கிய இடம் வகிக்கின்றது.
சாஸ்திரங்களின் அடிப்படையில் தேங்காய் உடையும் விதத்தை வைத்து சாதக மற்றும் பாதக பலன்கள் கூறப்படுவதுண்டு. ஆனால் விநாயகருக்கு தேய்காய் உடைக்கும் போது மட்டும் எவ்வித சகுணமும் பார்க்கப்படுவதில்லை.
ஆனால் ஏனைய அனைத்து சுப நிகழ்வுகளின் போதும் மற்ற தெய்வங்களின் வழிபாட்டின் போதும் தேங்காய் உடையும் சகுனம் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது. தேங்காய் உடையும் சகுணம் எதிர்காலத்தை பிரதிபளிப்பதாகவும் சில விடயங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதாகவும் நம்பப்படுகின்றது.
அந்தவகையில் தேங்காய் உடையும் விதம் குறித்த நம்பிக்கைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் உடையும் பலன்கள்
கோயிலுக்கு தேங்காய் வாங்கி செல்லும் போது அந்த தேங்காய் அழுகி இருந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடாது என்று பலரும் பயப்படுவார்கள். ஆனால் அப்படி ஒன்றும் ஆகாது. நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சற்று கால தாமதம் ஆகும். அவ்வளவு தான்.
தேங்காய் உடையும் போது தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும். ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.
தேங்காய் சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் என நம்பப்படுகின்றது.
ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும் நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும் என்பது ஐதீகம்.
முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம் ஏற்படலாம் முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்.
சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு மற்றும் ஆபரணம் பெருகும். ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்.
அதே போல் தேங்காய் உடைக்கும் போது, தேங்காயின் சிறிய பாகம் அதனுள் விழும். இப்படி தேங்காய்க்குள் தேங்காய் விழுந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கபோகிறது என்று அர்த்தம்.
தேங்காய் உடைக்கும் போது அதில் பூ விழுந்தால், உங்கள் ஆசை மற்றும் கனவுகள் நிறைவேறும் என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |