தேங்காய் இருந்தா போதும்! அருமையான தேங்காய் ஐஸ்க்ரீம் நொடியில் ரெடி
நம்மில் ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளைப் பிரியம்தான்.
சரி இனி தேங்காய் வைத்து எவ்வாறு ஐஸ்க்ரீம் செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - manu's menu
தேவையான பொருட்கள்
சோள மா - 4 கரண்டி
தேங்காய் பால் - 4 கப்
தேங்காய் பத்தை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1 கப்
image - cdkitchen
செய்முறை
முதலில் ஒரு தேங்காயை உரித்து, உடைத்து பத்தையை மட்டும் தனியே எடுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் நறுக்கிய தேங்காய், சோள மா, அரை கப் குளிர்ந்த தேங்காய்ப் பால் என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதன்பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து மீதி பாலை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை நேர்த்து நன்றாக கரையும் வரை கிளறவும்.
இதை 5 நிமிடங்கள் வரை கிண்டியபடியே கொதிக்க விடவும். இப்போது சோள மா, தேங்காய் பால் கலவையை பாலுடன் சேர்த்து மீண்டுமொருமுறை நன்றாகக் கலக்கவும்.
பால் நன்றாக வற்றிய பின்னர் அடுப்பை அணைத்து அந்தக் கலவையை குளிர்விக்கவும். அதற்கடுத்ததாக, சேர்மம் நன்றாக ஆறியபின் அதில் ப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பின் ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து அதில் சேர்மத்தை ஊற்றவும். இப்போது இந்த பாத்திரத்தை அலுமினிய ஃபாயில் ஷீட் மூலம் மூடி ஃப்ரீசரில் வைக்கவும்.
செய்து வைத்துள்ள இந்தக் கலவையை 7 மணிநேரம் அப்படியே விடவும். இந்த கலவையை ப்ளெண்டர் ஜாடிக்கு மாற்றி நன்றாக ப்லெண்ட் செய்யவும்.
இந்தக் கலவையை அலுமினியப் பாத்திரத்தில் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்து அலுமினியப் ஃபாயில் ஷீட்டால் மூடி கலவை செட் ஆகும் வரையில் உறைய விடவும்.
இதை 6 மணிநேரம் கழித்து எடுத்தால் கோகனட் ஐஸ்க்ரீம் ரெடி.
image - beaming baker