சூரிய உதயத்தை ரசிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆய்வு கூறும் புதிய விளக்கம்!
காலையில் சூரியன் மேலே எழும்பி வருவது சூரிய உதயம் என்றும், மாலையில் அது மேற்கே மறைவது சூரிய அஸ்தமனம் என்பது நாம் அறிந்ததே. இவை இரட்டையுமே நாம் ரசிப்பது வழக்கம் தான்.
ஆனால் இதனை ஏன் ரசிக்கிறோம் என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஆம். இவ்வாறு ரசிப்பதற்கும் அறிவியல் காரணம் இருக்கிறது என கூறப்படுகிறது.
புதிய ஆராய்ச்சி
சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் போன்ற “எபிமரல் நிகழ்வுகள்” மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதிய ஆராய்ச்சி சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் போன்ற “எபிமரல் நிகழ்வுகள்” மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதாவது, வானிலை மற்றும் சூரியனின் தினசரி தாளங்களின் மாறுபாடுகளுக்கு மனிதர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதையே “எபிமரல் நிகழ்வுகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், இயற்கை மற்றும் நகர்ப்புற சூழல் கொண்ட நிகழ்வுகள் தொடர்பான படங்கள் 2,500 க்கும் மேற்பட்ட நபர்களிடம் காண்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகள் மற்றத்தை விட கணிசமாக மிகவும் அழகாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்வு
இந்த நிகழ்வுகள் உணர்ச்சியை தூண்டுவதாகவும், மனநிலையை மேம்படுத்துவதாகவும், புதிய உணர்ச்சிகளை அதிகரிப்பதற்கும், ஆற்றல் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் தவிர, வானவில், மழைப் புயல்கள், நட்சத்திரங்கள் போன்ற அரிய நிகழ்வுகளை நாம் பார்க்கும் போது எமக்குள் ஒரு புதிய புத்துணர்வும் பொசிட்டிவ் எண்ணங்கள் தோற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய எனர்ஜி மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவையனைத்தையும் நாம் ரசிக்கின்றோம் என ஆய்வு குறிப்பிடுகிறது.