சருமத்திலுள்ள தழும்புகளை போக்கும் கொகோ பட்டர் ஸ்க்ரப்
அழகை பராமரிப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். அந்த வகையில் பல வகையான பொருட்களை முகத்துக்கு உபயோகப்படுத்துகின்றோம்.
குறிப்பாக முக அழகுக்கு பயன்படுத்தும் க்ரீம்களில் கொகோ பட்டர் மிகவும் முக்கியமானது. கொகோ பட்டர் எனப்படுவது கொகோ விதைகளிலிதருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளாகும்.
கொகோ பட்டரில் லினோலிக், ஒலிக், ஸ்டீரிக் அமிலங்கள் போன்றன உள்ளன. இது சேதமடைந்த செல்களை சருமத்திலிருந்து நீக்கி புதிய அடுக்குகளை உருவாக்கும்.
சருமத்தில் உள்ள தழும்புகள், வடுக்கள் என்பவற்றறை போக்கும் தன்மை இதற்குண்டு.
இனி கொகோ பட்டர் ஸ்க்ரப்பை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - bebeautiful
தேவையான பொருட்கள்
கொகோ பட்டர் - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை பொடி - 1 தேக்கரண்டி
எவ்வாறு செய்வது?
முதலாவது கொகோ பட்டர், தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் உருக்க வேண்டும்.
பின்பு அதில் இலவங்கப்பட்டை பொடி, சர்க்கரை என்பவற்றை நன்றாக கலக்கவும். இதை காற்றுப் புகாத கண்ணடி ஜாடியில் சேமித்து பயன்படுத்தலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது? வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இந்த ஸ்க்ரப்பை சருமத்தின் மீது பூசவும்.
அப்படியே மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.