தீக்காயத்தால் ஏற்பட்ட வடு மறையலயா? இப்படி பண்ணுங்க மறைஞ்சிடும்
நமது சருமத்தை பாதிக்கும் காரணிகளில் தீக்காயங்கள் முக்கியமானவை, தீங்காயங்கள் சருமத்தில் மோசமான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் ஆழமான வடுக்கள் நமது சருமத்தில் ஏற்படுகின்றன.
இந்த வடுக்களை நீக்குவதற்கு சில உதவிக்குறிப்புகள் உதவுகின்றன. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.
தீக்காய தழும்புகள்
வடுக்கள் அல்லது தழும்புகள் என்பவை நமது முக அழகை மோசமாக்க கூடியவை. அதிலும் தீக்காயங்கள் என்பவை மோசமானவை. தீக்காயங்கள் நமது தோலில் மோசமான தழும்புகளை உருவாக்குகின்றன.
இந்த தழும்புகளை சரி செய்வதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறைகள் உதவலாம்.
ஆனால் நமது உடலில் தீக்காயங்கள் ஏற்படுகிறது எனில் அது வடுவாக மாறுவதற்கு முன்பு நாம் அதை குணமடைய செய்ய வேண்டியது முக்கியமாகும்.
தீக்காயங்கள் சரும செல்கள் இறப்பதற்கு காரணமாகின்றன.
இதனால் சேதமடைந்த சருமங்கள் பெரும்பாலும் தன்னை குணப்படுத்தும் செயல்முறையின் போது வடுக்கள் உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
பிளாஸ்டிக் அல்லது ஒப்பனை அறுவை சிகிச்சையை தவிர லேசர் சிகிச்சை, மைக்ரோ டெர்மபிரேசன், ரசாயன முறை என பல முறைகளில் வடுக்கள் நீக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு முறையாக வெஜ் பீல் முறை உள்ளது.
தீக்காயங்கள் சரும செல்கள்
இறப்பதற்கு காரணமாகின்றன. இதனால் சேதமடைந்த சருமங்கள் பெரும்பாலும் தன்னை குணப்படுத்தும் செயல்முறையின் போது வடுக்கள் உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
பிளாஸ்டிக் அல்லது ஒப்பனை அறுவை சிகிச்சையை தவிர லேசர் சிகிச்சை, மைக்ரோ டெர்மபிரேசன், ரசாயன முறை என பல முறைகளில் வடுக்கள் நீக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு முறையாக வெஜ் பீல் முறை உள்ளது. வெஜ்
பீல் எப்படி செய்வது?
இந்த வெஜ் பீல் முறையானது சருமத்தில் நிரந்தரமாக வடுக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதனால் இது பாதுகாப்பானதாகும், மேலும் இதில் நிறைய இயற்கையான சாறுகள் இருப்பதால் இது சருமத்திற்கு பல நன்மைகளை பயக்கிறது.
வெஜ் பீலில் உள்ள தாவர சாறுகள் சருமத்தை சரி செய்ய உதவுகிறது. வெஜ் பீலை சருமத்தில் மெதுவாக தேய்ப்பது மூலம் நாம் இதை பயன்படுத்த முடியும்.
இதன் விளைவானது நமது சருமத்தில் மென்மையாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். உண்மையில் இதில் உள்ள தாவரத்தின் சாறுகள் சருமத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
இவை நமது தீக்காயங்கள் குணமடைந்த பிறகு நமது வடுக்களில் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்
பாரம்பரிய முறையின் அடிப்படையில் இயற்கைப் பொருள்களைக் கொண்டே இந்த வெஜ் பீல் முறை செய்யப்படுகிறது.
அதாவது தாவர சாறு மற்றும் சிறுதானிய பொருட்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்பை கொண்டு சருமத்தில் மெதுவாக தேய்க்கப்படுகிறது. வீட்டில் கூட வெஜ் பீல் செய்ய முடியும்.
இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இதில் பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லை.
ஆனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வடு பெரிதாக உள்ளது எனில் அப்போது உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.