வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமா? செலவில்லாத இந்த வழிகள் தெரிந்தால் போதும்
நாம் வீட்டை எப்படி சுத்தம் செய்தாலும் வீட்டில் எறும்புகள், பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்கும். இந்த தொல்லை இருந்தால் வீட்டில் உணவுப்பொருட்களை கூட வைக்க முடியாது.
இந்த ஜீவராசிகள் மழைக்காலங்களில் வீட்டில் அடைக்கலம் தேடி வரும். இதனால் நமது ஆரோக்கியத்திற்கு இது தீங்கு விளைவிக்கும். இந்த உயிரினங்களை விரட்ட கடைகளில் இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இரசாயன பொருட்களை பயன்படுத்தும் போது அது நமது சுவாசத்திலோ இல்லை வேறு எதாவது வழியிலோ தீய விளைவுகளை ஏற்படுத்தும். இதை இயற்கை முறையில் எப்படி விரட்டலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கரப்பான் பூச்சிகளை விரட்ட வழிமுறைகள்
வீட்டில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடங்களாக குளியலறை சமயலறை சொல்லலாம். இதற்கு வீட்டில் இருக்கும் மண்ணெண்ணையை எடுத்து அடிக்கடி கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் தெளிக்க வேண்டும்.
இப்படி செய்தால் அந்த இடத்திற்கு கரப்பான் பூச்சி வராது. வீட்டில் இருக்கும் பேக்கிங் சோடா மட்டும் சக்கரையை எடுத்து அதை தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
இது தவிர வீட்டில் எலுமிச்சை இருந்தால் அதை இரண்டாக வெட்டி கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். கரப்பான் பூச்சிக்கு எலுமிச்சை வாசம் பிடிக்காது. இதனால் இந்த மணம் உள்ள இடத்தில் கரப்பான் பூச்சி வராது.
எறும்புகளை விரட்ட வழிமுறை
எறும்புகள் கடித்தால் வலி அதிகமாக இருக்கும் வீட்டில் உணவுகள் சிந்தும் இடத்தில் எறும்புகள் வருவது சாதாரணம்.
இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை எறும்புகள் வரும் இடத்தில் தெதளித்தால் எலுமிச்சை வாசனைக்கு எறும்புகள் வராது. மளகுப்பொடியை எறும்பு வரும் இடத்தில் துவ வேண்டும். இதனால் எறும்புகள் வீட்டை அண்டாது.
பல்லியை விரட்டும் வழிமுறை
வீட்டில் இருக்கும் வெங்காயத்தை வெட்டி அதை தண்ணீரில் நனைத்து பல்லிகள் வரும் இடத்தில் தெளிக்க வேண்டும். இந்த வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது என்பதால் அந்த இடத்திற்கு பல்லிகள் வராது. இது தவிர காபித்தூள் மற்றும் புகையிலை இலைகளின் கலவை பல்லியை விரட்ட உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |