நெருங்கிய உறவு திருமணம்... குழந்தையை பாதிக்குமா?
பெண் கொடுத்து பெண் எடுத்தல் சம்பிரதாயமானது அந்தக் காலத்திலிருந்தே வருகின்றது.
மாமா, அத்தை பிள்ளைகள், சொந்த தாய்மாமா என்று சொந்தம் விட்டுப் போகக் கூடாது, சொத்து வெளியில் போகக் கூடாது போன்ற காரணங்களுக்காகவும் சில வேளைகளில் ஒருவரை ஒருவர் பிடித்துப்போயிருப்பதாலும் சொந்தங்களுக்குள் திருமணங்கள் நடக்கின்றன.
இரத்த உறவுகளுக்குள் திருமணம் முடிக்கக்கூடாது. அவ்வாறு திருமணம் நடந்தாலும் குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகக் காணப்படுகிறது.
குழந்தையொன்று ஊனமாக பிறக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், மிகப்பெரிய காரணமாக கருதப்படுவது இரத்த உறவு திருமணங்கள்தான் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தபந்த திருமணங்கள் தங்களது மூதாதையரின் மரபணுக்களை தமக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் கடத்துவதால் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி ஊனமாக பிறப்பதற்கு வழி வகுக்கிறது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த நெருங்கிய உறவு திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த இரத்தபந்த திருமணங்கள் தவிர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஊட்டச்சத்து குறைபாடு, குறைப்பிரசவம், மஞ்சள் காமாலை போன்றனவும் குழந்தையானது ஊனமாக பிறப்பதற்கு வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.