தாலி கட்டும் சமயத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. உடனடி ஆக்ஷன் எடுத்த பொலிஸார்
“பேராசை பிடித்தவன் எனக்கு வேண்டாம்” என தாலிக்கட்டும் சமயத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வரதட்சணை கொடுமை
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் மாப்பிள்ளைக்கு கோடிக்கணக்கில் பணம், கார், வீடு, பொருட்கள் என அனைத்தையும் கொடுப்பது கௌரவம் என நினைக்கிறார்கள்.
இது காலப்போக்கில் திருமணம் என்றாலே வரதட்சணை வாங்குவது பழக்கமாகி விட்டது. இதனால் பல பெண்கள் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். ஆண்களை பெற்ற பெற்றோர்கள் மருமகளை பணம் கொண்டு வரும் வெறும் வாய்ப்பாகவே பார்ப்பதால் பல குடும்பங்கள் தற்போது மகிழ்ச்சியாக இல்லை.
இதனை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்து வகையில், தாலிக்கட்டும் சமயத்தில் தன்னுடைய வாழ்க்கையை யோசிக்காமல் தன்னுடைய குடும்பத்தினருக்காக பெண்ணொருவர் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம்- பரேலி பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மாப்பிள்ளை வீட்டிலுள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் கார் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கமாக கேட்டுள்ளனர்.
மணப்பெண்ணின் அதிரடி ஆக்ஷன்
இதற்கு முன்னர் பெண் வீட்டாரிடம் இருந்து, நிச்சயதார்த்த விழாவிற்காக 3 லட்சம் ரூபாய், தங்க மோதிரம், ஒரு சங்கிலி மற்றும் ரூ.5 லட்சம் , ஏர் கண்டிஷனர், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் மற்றும் ரூ.1.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்கள் மற்றும் திருமணத்திற்காக விலையுயர்ந்த திருமண மண்டபம் ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்கள்.
இவற்றை வாங்கி விட்டு தாலிக்கட்டும் சமயத்தில், பெண் வீட்டாரிடம் கார் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கமாக கேட்டால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் இவ்வளவு செய்துள்ளார்கள் என நினைக்காமல் மணப்பெண்ணின் உறவினர் ஒருவரை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இதனால் தன்னுடைய பொறுமையை இழந்த மணப்பெண், “பண ஆசை பிடித்த ஒருவருடன் என்னால் வாழ முடியாது. இவ்வளவு கொடுத்தும் என்னுடைய உறவினரை அசிங்கப்படுத்துகிறார்கள். என்னை எப்படி மரியாதையாக நடத்துவார்கள்..” என காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் பேசி வெளியிடுகிறார்.
அப்போது காணொளியை பார்த்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இரு வீட்டாரையும் தங்களின் கட்டுபாட்டில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள். பெண் வீட்டாரின் முறைபாடுகள் உறுதிச் செய்யப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தி காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
🚨BAREILLY BRIDE: "This man humiliated my father & brother in front of all guests" 😱
— News Algebra (@NewsAlgebraIND) December 13, 2025
"He demanded Rs 20 lacs dowry & a Brezza Car"
"I don't want to marry these dowry-greedy people"
"I can't spend my life with such a boy who doesn't respect my father"🔥 pic.twitter.com/xPGhKy1rPt https://t.co/7Y8TuK3sSL
BIG NEWS 🚨 Bride calls off wedding at the last moment in Bareilly after groom allegedly demanded Rs 20 lakhs dowry and a Brezza car 🤯
— News Algebra (@NewsAlgebraIND) December 13, 2025
Seeing her family helpless, the bride refused to get married. pic.twitter.com/eKysgWwbNN
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |