உடல் எடையை குறைக்கணுமா? சிம்பு சொல்லும் ரகசிய உத்தி இதுதான்!
நடிகர் சிம்பு உடல் எடையை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது என்பது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ள சில ரகசிய உத்திகள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களின் உடல் எடையை சீராக பராமரித்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால் தற்காலத்தில் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, ஒரே இடத்தில் அமர்ந்தபடியான தொழில் முறை, போதிய உடற்பயிற்சியின்மை, முறையற்ற உணவுப்பழக்கம் போன்ற பல்வேறு வாழ்க்கை மாற்றங்களின் காரணமாக வயது வேறுபாடு இன்றி அனைவருக்கும் உடல் பருமன் பிரச்சினை காணப்படுகின்றது.
உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பாதால், அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதும், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

இரவு உணவு முக்கியமா?
நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டியொன்றில் இது குறித்து பேசிய போது, தான் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இரவு உணவை தவிர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீறியும் சில நேரங்களில் சாப்பிட்டால், குறைந்தது 3 மணிநேரம் கழித்து தான் படுக்கைக்கு செல்வாராம்.

சாப்பிட்டவுடன் சில நிமிடங்கள் நடப்பது, இன்னும் நல்லது. எப்போதுமே சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பழக்கம் உடல் எடையை எவ்வாறு கட்டுத்த உதவும் என்று யோசிக்கின்றீர்களா? இது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடிகாரத்தில் 24 மணிநேரங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் தான் நாம் இயங்குகின்றோம்.எந்த வேலையை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நாம் முடிவு செய்வதை போலவே, நமது உள் உறுப்புகளும் எந்த நேரத்தில் எந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு கோட்பாட்டின் பிரகாரம் தான் இயங்குகின்றது.இதை தான் உடல் கடிகார கோட்பாடும் வழிவுறுத்துகின்றது.
அதாவது நமது உணவை சூரியன் இருக்கும் போதே முடித்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான ஆற்றல் சீராக இருக்கும்.

சூரியன் மறைந்ததன் பின்னர் சாப்பிடும் போது வளர்சிதை மாற்றங்கள் சீராக இயங்காது.இதனால் கலோரி எரிப்பது தாமதமாகி மேலதிக கொழுப்புகள் உடலில் அதிகம் சேமிக்கப்படுகின்றது.இதுவும் உடல் பருமன் அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.
இரவில் லேசான பசியோடு தூங்கச் செல்வதால், அல்லது இரவில் 7 மணிக்குள் உணவை முடித்துக்கொள்வதால், இரவில் உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கும்.

இரவு உணவை நிச்சயம் சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள். இரவு உணவை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக எடுத்துக் கொள்வது சிறப்பு.
மேலும் இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் குறைந்தது 3 மணிநேரமாவது இடைவேலை இருக்க வேண்டியது அவசியம்.இது, தூக்க வரைமுறையை நெறிபடுத்துவதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |