Summer Tips: புதிய மண் பானையை பயன்படுத்த போறீங்களா? இதை கட்டாயம் செய்திடுங்க
சாமானிய மக்களின் ஐஸ் வாட்டராக இருக்கும் மண் பானை குடிநீரை, புதிதாக பானை வாங்கி பயன்படுத்தும் முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மண்பானை குடிநீர்
கோடை காலங்களில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளில் குளிர்ச்சியான தண்ணீருக்காக பயன்படுத்தும் பாத்திரம் தான் மண் பானை. மண்பானை தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.
வெயில் காலத்தில் புதிதாக மண் பானை வாங்குபவர்கள் அதனை பயன்படுத்துவதற்கு 3 நாட்கள் ஆகும்.
முதலில் மண் பானையை நன்றாக தூசி இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். புதிய பானையை சுத்தப்படுத்தும் போது உள்பக்கமாக கழுவக் கூடாது. வெளிப்புறத்தில் நன்றாகக் கழுவலாம்.
பின்பு பானையில் முழுக்க தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் பானையில் உள்ள தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, நிழலில் காய வைக்க வேண்டும்.
மறுபடியும் தண்ணீர் ஊற்றி சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 2-3 முறை தண்ணீர் மாற்றிய பிறகு, அரிசி களைந்த நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு பானையில் தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் கல் உப்பைப் போட்டு 12 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சாதாரண நீர், அரிசி களைந்தநீர், உப்பு நீர் என இவற்றினை மாற்றி மாற்றி 3 நாட்கள் ஊற்றி தயார் செய்யவும்.
இவ்வாறு மூன்று நாட்கள் முடிந்த பின்பு குடிநீரை ஊற்றலாம். ஆனால் பானையின் தண்ணீரை மாற்றும் முன் வெயிலில் காய வைத்தால், விரிசல் ஏற்பட்டு விடும்.
பானையை தரையில் வைப்பதற்குப் பதிலாக, ஆற்று மணலைக் குவித்து வைத்து அதன் மேல் மண் பானையை வைக்க வேண்டும்.
மேலும் ஈரத்துணி பானையை சுற்றி போர்த்தி வைக்கலாம். படிகாரம் அல்லது வெட்டிவேரை தண்ணீரில் போட்டு வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |