கொழுக் மொழுக் என உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன சீரியல் நடிகர்! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
பல நடிகர்கள் இன்று சரியான வாய்ப்புகள் இல்லாமல், சரியான பணம் இல்லாமல், சரியான வாழ்வுமுறை இல்லாமல், தவித்து வருவதை நாம் பார்த்திருப்போம்.
அதிலும் சீரியல் நடிகர்கள் பலர் வாய்ப்புகள் இல்லமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
இந்தநிலையில் சீரியல் நடிகர் டிங்கு சிறுவயது முதல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அதிலும் 90’s கிட்ஸ் மத்தியில் இவர் ரொம்பவே பரிட்சியமான நடிகர்.
தற்போது 40 வயதாகும் இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ரஜினிகாந்துடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்திலும், கமல்ஹாசனுடன் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்ற படத்திலும், விஜயகாந்துடன் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்னும் படத்திலும், நடித்து அப்பவே ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.
பிறகு ஏனோ சினிமா பக்கம் ஆர்வம் காட்டாமல் சீரியல் பக்கம் திரும்பினார் டிங்கு.
இப்போது திருமணமாகி அவரது அழகான குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
அங்கே “டிங்கு டான்ஸ் அகாடமி” என ஒரு நடன பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அஜித் போல் SALT AND PEPPER லுக்கில் அடையாளம் தெரியாமல் கொழுக் மொழுக் என்று இருக்கிறார் டிங்கு.