அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
“அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா…” என்ற பாடலில் வரும் நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தொட்டால் பூ மலரும்
கடந்த 2007-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் அவரது மகன் சக்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ‘தொட்டால் பூ மலரும்’. இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வரும் “அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா..” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. பர்தாவுடன் பேருந்தில் அமர்ந்திருக்கும் நடிகையை யார் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
இதன்படி, தொட்டால் பூ மலரும் படத்தில் வரும் நடிகையின் பெயர் கௌரி முன்ஜால். இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘Bunny’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2008-ல் வெளியான “சிங்க்குட்டி” என்ற படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தற்போது எப்படி இருக்கிறார்?
இந்த நிலையில், தமிழில் இரண்டு படங்களில் மாத்திரம் நடித்திருந்தாலும் கோலிவுட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர், சினிமா பக்கம் இருந்தாலும் சுமாராக 15 வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்றும் தான் தற்போது இருக்கிறாரா? என்பதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வகையில், கௌரி முன்ஜாலின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது அப்போ இருந்த அதே தோற்றம் இல்லாவிட்டாலும், அந்தக் கவர்ச்சி இன்னும் இருக்கிறது.
39 வயதாகும் கௌரி முன்ஜாலு டெல்லியில் தான் வசிக்கிறார். மாறாக இவர், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
