அந்த சம்பவம்... கண்கலங்கியபடி பேசிய கிறிஸ் ராக்- எழுந்து நின்று கைதட்டிய ரசிகர்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த 27-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக 53 வயதான நடிகர் வில் ஸ்மித்திற்கு, சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
கன்னத்தில் அறைந்த கிறிஸ் ராக்
இந்நிலையில் சிறந்த ஆவணப்படத்திற்கான ட்ரோஃபியை வழங்குவதற்காக மேடையில் நின்று கொண்டிருந்த பிரபல நடிகர் கிறிஸ் ராக் மேடையில் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.
அப்போது கிறிஸ், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியும் நடிகையுமான ஜடா பிங்கெட்டை கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'ஜி.ஐ.ஜேன்' படத்தில் தலையை மொட்டையடித்து நடித்த நடிகை டேமி மூரேவுடன் ஒப்பிட்டு நகைச்சுவையாக பேசினார்.
ஜடா பிங்கெட் ஸ்மித்துக்கு முடி உதிர்தலை ஏற்படுத்தும் பிரச்சினை இருப்பதை ராக் அறிந்திருந்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கிறிஸ் ராக்கின் இந்த செயலால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையேறி நடிகர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்துவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினார்.
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஸ்மித்தின் இந்த செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
டாப் லிஸ்டில் இடம் பிடித்த வில் ஸ்மித்தின் இனு காயின் - ட்ரெண்டிங் காயின் நிலவரம்
மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்
பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ஸ்மித், “விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.
அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. எனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறேன்.
எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களிடமும் மன்னிப்பு கேட்டு க்கொள்கிறேன்" என கடந்த திங்களன்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் ஸ்மித்தை கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கூறியதாக ஆஸ்கர் அகாடமி தெரிவித்திருக்கிறது.
சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள் - இண்டர்நெட் பிரச்சினை உருவாகுமா?
ஆஸ்கர் அகாடமி விளக்கம்
இது குறித்து கடந்த புதன் கிழமையன்று கருத்து தெரிவித்துள்ள தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ்,
“ 94-வது ஆஸ்கர் விருதுகளில் ஸ்மித்தின் செயல்கள், நேரிலும் தொலைக்காட்சி வாயிலாக கண்ட அனைவருக்கும் அதிர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது. ராக், எங்கள் மேடையில் நீங்கள் இத்தகைய ஒன்றை அனுபவித்ததற்கு நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
அந்த தருணத்தில் நீங்கள் உங்கள் பொறுமையை கடைப்பிடித்து நடந்துக்கொண்டதற்கு நன்றி.
ஒரு கொண்டாட்ட நிகழ்வாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வின்போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவங்களுக்காக நாங்கள் ஜூரிகளிடமும் விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்தது.
"நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எல்லாம் நடந்துவிட்டது, ஸ்மித் விழாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதையும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.”
மேலும், “நாங்கள் இந்த நிலைமையை வேறுவிதமாகக் கையாண்டிருக்கலாம் என்பதையும் உணருகிறோம்." எனவும் அகாடமி தெரிவித்திருக்கிறது.
நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்! விருது பறிக்கப்படுகின்றதா?
கண்கலங்கிய கிறிஸ் ராக்
இந்நிலையில் ஆஸ்கரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக, கடந்த புதன்கிழமையன்று கிறிஸ் ராக், போஸ்டன் நகரில் உள்ள வில்பர் திரையரங்கில் நடைபெற்ற ஸ்டேண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மேடையேறிய அவர் அங்கிருந்த பார்வையாளர்களை பார்த்து, “உங்களின் வார இறுதி நாட்கள் எப்படி கழிந்தது?” என உற்சாகமாக கேட்டார்.
மேலும், “ஆஸ்கரில் கழிந்த என்னுடைய வார இறுதி நாட்களை பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கு நடந்த சம்பவத்தை கடந்து செல்ல நான் இன்னும் முயற்சிக்கிறேன்.
எனவே ஒரு கட்டத்தில் அதை பற்றி நான் பேசுவேன், அது சீரியஸாக இருக்கும், வேடிக்கையாக இருக்கும். ஆனால் இப்பொழுது நான் சில நகைச்சுவைகளைச் சொல்லப் போகிறேன். ” என கூறினார்.
இதை கேட்ட பார்வையாளர்கள் 57 வயதான அவருக்கு எழுந்து நின்று கைகளை தட்டி தங்களது ஆதரவையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.
நடிகர் வில் ஸ்மித் மீது நடவடிக்கை.. ஆஸ்கார் அகாடமியின் அதிரடி
எழுந்து நின்று கைத்தட்டிய மக்கள்
கண்களில் கண்ணீருடன் தொடர்ந்து பேசிய ராக், "அந்த நிகழ்வை பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை, அதற்காக நீங்கள் இங்கு வந்திருந்தால்...(இடையில் நிறுத்திவிட்டு) இந்த வார இறுதிக்கு முன் நான் ஒரு முழு நிகழ்ச்சியை எழுதியிருந்தேன்." என தெரிவித்தார்.
80 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எந்த ஒரு இடத்திலும் வில் ஸ்மித்தை குறித்து ராக் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் எதிரொலித்த இந்த சம்பவத்திற்கு பிறகு, வருகிற ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கவுள்ள கிறிஸ் ராக்கின் "ஈகோ டெத்" உலக சுற்றுப்பயணத்திற்கு கடந்த மாதத்தில் விற்பனை செய்ததை விட அதிக டிக்கெட்டுகள் ராக்கை ஸ்மித் அறைந்த அந்த ஒரே இரவில் விற்றதாக டிக்பிக் (TickPick) என்ற ஆன்லைன் இணையதளம் கூறியிருக்கிறது.
ஏப்ரல் மாத ராசிப்பலன் "2022" இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!!!