சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள் - இண்டர்நெட் பிரச்சினை உருவாகுமா?
சூரியனில் இருந்து கரும்புள்ளிகள் ஏற்படத்தொடங்கியுள்ளதால் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு சூர்ய காந்தபுயல் அதிக அளவில் வீச வாய்ப்பு இருப்பதால் செயற்கைக்கோள் மற்றும் கைப்பேசி அலைவரிசகள் பாதிக்கலாம் என நாசா மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைதொடர்ந்து, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில், 4 தொலைநோக்கிகள் உதவியுடன் சூரியனை தீவிரமாக கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
வெப்பம் அதிகரிக்கும்
நகை பிரியர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி - இன்றைய நிலவரம்
11 ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் சூரிய கரும்புள்ளிகள் கடந்த சில நாள்களாக சூரியனில் தோன்றி வருவதாகவும், இனி வரும் நாள்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்தப் புயலாக மாறி பூமிக்கு வரும்.
இதனால் பூமியின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவு, இண்டர்நெட் பிரச்சினை ஏற்படலாம் என கூறுகின்றனர்.
இனி வரும் நாள்களில் சூரியனைத் தொடா்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவு செய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.