நடிகர் வில் ஸ்மித் மீது நடவடிக்கை.. ஆஸ்கார் அகாடமியின் அதிரடி
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் விருது விழா மேடையில் மனைவியை கிண்டல் செய்ததாக சக காமெடி நடிகரை கன்னத்தில் அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பரவியது.
அதற்கு வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டிருந்தாலும், பலரும் கண்டனமும் தெரிவித்து வந்தனர். இதனிடையே ஆஸ்கார் மேடையில் வில் ஸ்மித் செய்த விஷயம் தவறானது என ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.
இதனால் அவர் மீது ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்கார் அகாடமி வெளியிட்டதில், கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம்.
டாப் லிஸ்டில் இடம் பிடித்த வில் ஸ்மித்தின் இனு காயின் - ட்ரெண்டிங் காயின் நிலவரம்
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.
தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.
நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்! கண்ணீர் மல்க கேட்ட மன்னிப்பு: விருது பறிக்கப்படுகின்றதா?
அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ் ராக், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள், விருந்தினர் மற்றும் பார்வையாளர்களிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கோரியுள்ளது.