ஏப்ரல் மாத ராசிப்பலன் "2022" இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!!!
2022 ஆம் ஆண்டின் நான்காவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும்.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.
உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கே பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கஷ்டங்கள் நீங்கும்.
பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பார்கள். வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இம்மாதத்தில் அனைத்து வியாபார முடிவுகளையும் புத்திசாலித்தனமாக எடுப்பார்கள். இது நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும், உங்கள் குழந்தைகளால் மிகவும் பெருமைப்படுவீர்கள்.
பணத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் நீங்கள் கவனமாக நடக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் குடும்பக் கடனின் அழுத்தத்தில் இருந்தால், உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் சீராகும். இருப்பினும், சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 11, 22, 37, 44, 50
அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வெள்ளி, ஞாயிறு, திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு, வான நீலம், வயலட்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். சமீபத்தில் ஏதேனும் போட்டித் தேர்வை எழுதியிருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்படலாம்.
வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காக ஏதேனும் புதிய படிப்பு போன்றவற்றைச் செய்யத் திட்டமிட்டால், இம்மாதம் அதற்கு சரியாக இருக்கும். வியாபாரிகள் இம்மாதத்தில் கூட்டு வியாபாரம் செய்யலாம். பணிபுரிபவர்கள், இக்காலத்தில் பதவி உயர்வில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
நீங்கள் புதிய வீடு அல்லது வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பணமும் பெறலாம். சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 18, 24, 36, 45, 59
அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், சனி, செவ்வாய், ஞாயிறு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் வியாபாரிகளுக்கு மிகவும் பிஸியானதாக இருக்கும். இம்மாதத்தில் பல சிறிய வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணிபுரிபவர்கள், விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம்.
அரசு வேலை செய்பவர்களின் வருமானம் கூடும். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், இந்த மாதம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
மாத இறுதியில் உங்கள் தாயாரின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இதனால் நீங்கள் அவர்களின் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் நிதி நிலையைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகளின் சரியான கணக்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, சொத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 10, 21, 38, 43, 57
அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், ஞாயிறு, சனி, திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், நீலம், பச்சை, இளஞ்சிவப்பு
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் மிகவும் பிஸியான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும்.
இம்மாதத்தில் எந்த விதமான ரிஸ்க் எடுக்கும் மனநிலையிலும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அலுவலகத்தில் போட்டி அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிலையை வலுவாக வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு இந்த நேரம் சற்று சவாலாக இருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம். இம்மாதத்தில் நீங்கள் புதிய வேலையைத் தொடங்கினால், நீங்கள் நல்ல பலனைப் பெறலாம். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும்.
பண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி திட்டங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், அதை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 19, 25, 39, 47, 50
அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வெள்ளி, செவ்வாய், திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், நீலம், ஊதா, குங்குமப்பூ
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். இம்மாதத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் நீங்கள் செய்யும் வேலையை கெடுத்துவிடும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை தடுமாறலாம்.
பணப்பற்றாக்குறையால் உங்களின் பணி மெதுவாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் பரபரப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். தனியார் வேலை செய்பவர்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். வேலையில் அலட்சியம் உங்கள் வேலையை ஆபத்தில் ஆழ்த்தலாம். நீங்கள் அதிக அழுத்தத்தை உணரலாம். பண வரவு சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இது தவிர, இந்தக் காலத்தில் பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் நல்லது. இம்மாதத்தில் அதிகரித்து வரும் மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 18, 36, 45, 59
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வியாழன், புதன், திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், கிரீம், வான நீலம், மெரூன்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறலாம். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலனைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் நீங்கள் கூடுதல் பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் இந்த நேரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். உங்கள் பணம் எங்காவது சிக்கலாம். மாதக் கடைசியில் நிதி நெருக்கடியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். யாரிடமும் தவறாக நடந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது, இல்லையெனில் உங்கள் வீட்டின் அமைதி கெடலாம். மாத இறுதியில், உங்கள் துணையுடன் நீண்ட பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 15, 20, 39, 44, 51
அதிர்ஷ்ட நாட்கள்: சனி, செவ்வாய், வியாழன், வெள்ளி, திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: கிரீம், மஞ்சள், வெள்ளை, மெரூன், பிரவுன்
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளை நடத்தலாம். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதன் மூலம், நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள், அதேபோல் உங்கள் தைரியம் துன்பங்களை எதிர்கொள்ளும்.
இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமாகாமல், திருமணம் செய்ய விரும்பினால், இந்த மாதம் நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம்.
உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் பண விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
வேலையைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரம் செய்பவர்களின் தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். அதேப்போல் மன அழுத்தத்தைக் குறைக்க முயலுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 10, 29, 32, 40, 52
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, புதன், வெள்ளி, செவ்வாய்
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, வான நீலம், ஊதா
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த ஏப்ரல் மாதம் உங்கள் கடினமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஒரு அதிருப்தி உணர்வு இருக்கும். கிரகங்களின் பாதக பலன்களால் உங்கள் பேச்சிலும் கசப்பு இருக்கும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். இது தொடர்ந்தால், உங்கள் வேலையை இழக்க நேரிடலாம். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது, எனவே அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும். இம்மாத இறுதியில் உங்கள் வழியில் வரும் அனைத்து தடைகளும் நீங்கும்.
பணவரவு சாதாரணமாக இருக்கும். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டு உறுப்பினர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 19, 28, 37, 44, 58
அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், புதன், வெள்ளி, சனி
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வான நீலம், மஞ்சள், வெள்ளை, சிவப்பு
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பற்றி சிந்திப்பது நல்லது, ஆனால் உங்களைப் புறக்கணிப்பது உங்களுக்கு நல்லதல்ல. எனவே உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குங்கள். முடிந்தால், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும் அல்லது பயணத்தைத் திட்டமிடவும். இதன் மூலம் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
நீங்கள் நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறும். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்று கனவு கண்டால், இந்த மாதத்தில் நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம்.
ஆனால் உங்கள் முயற்சிகளை கைவிடாமல், நீங்கள் தொடர வேண்டும். நேரம் வரும் போது நிச்சயம் வெற்றி கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இம்மாதத்தில் உங்களின் பணி அதிகரிக்கும். வீட்டில் சூழ்நிலை மிகவும் பதட்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை குலைந்து போகலாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.
சொத்து சம்பந்தமான எந்த பிரச்சனையும் மாத இறுதியில் தீர்க்கப்படும். இந்த மாதத்தில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தினமும் யோகா, தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 17, 21, 36, 48, 50
அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், சனி, வியாழன், திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூன், அடர் நீலம், கிரீம், ஆரஞ்சு
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அவசரப்படாமல் இருந்தால் நல்லது. இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும்.
அன்புக்குரியவர்களுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். உங்கள் உறவினர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். உங்கள் உறவுகளைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையின் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையால் நிதி நன்மைகளும் சாத்தியமாகும்.
கூட்டாண்மையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
இந்த நேரத்தில், உங்கள் செயல்திறன் குறையக்கூடும், இதன் காரணமாக உயர் அதிகாரிகள் உங்கள் மீது அதிருப்தி அடைவார்கள். நீங்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், வேலையில் அதிக கவனக்குறைவைத் தவிர்க்கவும். சில காரணங்களால், இந்த காலகட்டத்தில் உங்கள் சம்பளமும் தடைபடலாம், இதன் காரணமாக உங்கள் மனக் கவலைகள் மிகவும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 18, 24, 36, 44, 54
அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், வியாழன், செவ்வாய், சனி
அதிர்ஷ்ட நிறங்கள்: கிரீம், ஊதா, சிவப்பு, குங்குமப்பூ
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், உங்கள் வணிகத்தை வெளிநாட்டில் பரப்ப விரும்பினால், இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்பாட்டினால் உயர் அதிகாரிகளுடன் பலரது மனதையும் வெல்வார்கள். இருப்பினும், உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவழிக்கலாம். மாத இறுதியில் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையின் மகிழ்ச்சியையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் அதிகபட்ச நேரத்தை செலவிட வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 17, 22, 39, 46, 52
அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், திங்கள், வெள்ளி, செவ்வாய்
அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, மஞ்சள், நீலம், பழுப்பு
மீனம்
மீன ராசிக்காரர்களே! உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், சமமான கவனம் செலுத்த வேண்டும். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் போதுமான நேரத்தை செலவழிக்க வேண்டும், குறிப்பாக உங்கள் குழந்தைகளைக் கண்காணிக்கவும், இல்லையெனில் அவர்கள் தங்கள் பாதையிலிருந்து விலகிச் செல்லலாம்.
மாதத் தொடக்கத்தில் சற்று மன அழுத்தத்தில் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையைச் செய்ய நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.
வீட்டுப் பொறுப்புகளின் சுமையும் ஓரளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் உங்கள் துணையுடனான உறவு வலுவடையும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்வீர்கள். அதிகரிக்கும் செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும்.
வேலையைப் பற்றி பேசும்போது,பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழிலதிபர்கள் அவசர அவசரமாக புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
இது தவிர, முதலீடு தொடர்பான முடிவுகளை இப்போதே புத்திசாலித்தனமாக எடுங்கள், இல்லையெனில் நீங்கள் தந்திரமான திட்டத்தில் சிக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியம் சற்று குறையக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 14, 26, 34, 45, 55
அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி, திங்கள்
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஊதா, சிவப்பு, வெள்ளை, கிரீம்
தமிழ் புத்தாண்டு பலன்கள்; குரு சனியால் ராஜயோகத்தை அடையும் தனுசு ராசி!