முட்டை, இறால் இவற்றை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படுமா?
கொலஸ்ட்ரால் என்றால் உடம்பிற்கு கேடு என்ற எண்ணம் தான் நம் அனைவருக்கும் இருக்கின்றது.
அதிலும் இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது என்ற பயம் அதிகமாக இருக்கின்றது.
கொலஸ்ட்ராலுக்கு பயந்து ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளது.
நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். நமது உடம்பில் சில உறுப்புகள் செயல்படுவதற்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவதியமாகின்றது.
இங்கு உடம்பிற்கு தீமை விளைவிக்கும் என்று கூறும் கொலஸ்ட்ரால் உணவின் கட்டுக்கதைகள் குறித்து பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் உள்ள இந்த உணவுகள் ஆபத்தா?
முட்டை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவுகளை மோசமாக பாதிக்கின்றது என்ற தகவல் பொய் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டையில் HDL அல்லது நல்ல கொழுப்பு அதிகரிக்கும். LDL அல்லது கெட்ட கொழுப்பின் தாக்கம் இதில் மிகக் குறைவாக இருக்கின்றது. ஆகவே உணவில் கட்டாயம் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
இறால் உணவில் கொலஸ்ட்ரால் காணப்பட்டாலும், இதில் குறைந்த அளவு சாச்சுரேட்டட் கொழுப்பு காணப்படுகின்றது. இவை இதயத்திற்கு நல்லது.
மேலும் இதில் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே இறால் சாப்பிடுவது தவறு இல்லையாம்.
சிவப்பு இறைச்சியில் அதிகம் கொழுப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஆனால் இவற்றில் அத்தியவசிய ஊட்டச்சத்தான இரும்பு சத்து, சைட்டமின் B12 காணப்படுகின்றது. ஆதலால் சிவப்பு இறைச்சி சாப்பிடுவது எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
சீஸ் வகைகளிலும் கொழுப்பு அதிகமாக இருக்கின்றது என்று கூறப்படும் நிலையில், இதனை மிதமாக சாப்பிடலாம். இதில் கால்சியம் மற்றும் புரோட்டீன் காணப்படுவதால், குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளை தெரிவு செய்து சாப்பிடவும்.
பட்டர் ப்ரூட் என்று அழைக்கப்படும் அவகோடாவில் அதிக கொழுப்பு காணப்பட்டாலும், இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கின்றது. இந்த பழத்தை டயட்டில் சேர்ப்பதால் ஏராளமான நன்மையும் கிடைக்கின்றது.
ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் நிறைந்த ஒரு சில உணவுகள்
ஓட்ஸ், பார்லி, சியா விதைகள், ஆளி விதைகள், வால்நட், பாதாம் பருப்பு, அவகாடோ, ஆலிவ் எண்ணெய், பச்சை இலை காய்கறிகள், ப்ரோக்கோலி, ப்ளூபெர்ரிக்கள், ஆரஞ்சு, ஆப்பிள், டார்க் சாக்லேட், கிரீன் டீ, வஞ்சரம் மீன், சூரை மீன், கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன் இவைகள் ஆகும்.
அதாவது நீங்கள் சாப்பிடும் உணவுகள் கொலஸ்ட்ரால் என்று முடிவு செய்து சாப்பிடாமல் இருக்காமல், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை தெரிந்து கொண்டு சாப்பிடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |