கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன?
பாம்பு கடித்த சிறுவனை மூடநம்பிக்கையால் பெற்றோர்கள் கங்கை ஆற்றில் மிதக்கவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை கடித்த பாம்பு
இன்றைய காலத்தில் மூடநம்பிக்கை என்பது மக்களிடம் அதிகமாக இருந்து வருகின்றது. இவ்வாறான செயலினால் 14வயது சிறுவனின் உயிர் பிரிந்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் இருந்து வருகின்றது.
உத்தரபிரதேசம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ள நிலையில், அவருக்கு எந்தவொரு முதலுதவியும் அளிக்காமல் உள்ளூர் மந்திரவாதியிடம் பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவன் உடம்பில் உள்ள நஞ்சை முறிக்க பரிகாரம் ஒன்றினை கூறியுள்ளார். ஆம் சிறுவனை புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைத்தால் விஷம் தானாக வெளியேறுவதாக கூறியதையடுத்து பெற்றோர் அவ்வாறு செய்தனர்.

கங்கையில் மிதந்த உடல்
மூங்கிலில் மிதவை ஒன்றினை அமைத்து அதில் சிறுவனை படுக்க வைத்து, எங்கும் அசைந்துவிடாதவாறு கயிறினால் கட்டி மிதக்கவிட்டுள்ளனர்.
சுமார் 12 மணி நேரம் சிறுவன் கடும் குளிரான தண்ணீரில் மிதவையில் மிதந்துள்ளான். சிறுவனை நிலையை பெற்றோர்கள் உட்பட சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
அனைவரும் அதிசயம் நடக்கும் என்று நினைத்த நிலையில், 12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால் சிறுவனை தூக்கி பார்த்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுடன், இதற்கு காரணமாக இருந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோன்ற மூடந்பிக்கையினால் மக்கள் தங்களது உயிரை இவ்வாறு பலிகொடுப்பது மற்றவர்களின் மனதை பதற வைத்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |