இந்த தமிழ் புத்தாண்டில் கோடீஸ்வரராகப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் பராபவ ஆண்டில் மிகவும் செழிப்புடன் வாழப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு
சித்திரை 1ஆம் தேதியான இன்று 'பராபவ' ஆண்டு பிறந்தது. தமிழ் புத்தாண்டு உடன் பல கிரக மாற்றங்களும் நடைபெறுவதால் இன்று (ஏப்ரல் 14) சுபமான நாளாகும்.
மக்களிடையே இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கிணங்க இந்த பராபவ ஆண்டில் குறிப்பிட்ட ஐந்து ராசிகள் நல்லின்பத்தை பெறப்போகின்றனர்.
தமிழ் புத்தாண்டு மற்றும் பல்வேறு கிரக மாற்றங்கள் காரணமாக, இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு அமோசமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசியின் 3வது இடத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார். இதனால் பண வரவு அதிகமாக இருக்கும். எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு பொருளாதார ரீதியாக சிறப்பான ஆண்டாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.
கடகம்
- பராபவ ஆண்டின் 2ஆம் பாதியில் குருவின் உச்ச நிலை மற்றும் சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் இந்த ஆண்டில் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை சேர்ப்பார்கள்.
சிம்மம்
- இந்த பராபவ ஆண்டில் நிச்சயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு, கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தெளிவான திட்டமிடலால் லாபம் பல மடங்கு உயரும். அரசியல் மற்றும் கலைத்துறையினருக்கு ஏற்றம் இருக்கும். தொழிலில் உச்ச நிலை அடைவீர்கள்.
விருச்சிகம்
- இந்த பராபவ ஆண்டில், கடந்த கால சாவல்களை நீங்கும். இதனால், உங்களிடம் செல்வம் சேரும். கடின உழைப்பு உழைத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நிச்சயமாக உங்களுக்கு பணத்திற்கு மட்டும் பஞ்சம் வராது.
மீனம்
- குரு பகவான் உச்சம் பெற்று, குரு பூசத்தில் வருவதால் செல்வம் செழிக்கும் யோக பலன்கள் கிடைக்கும். இதுவரை இருந்த பண தட்டுபாடுகள்குறையும். நிதி நெருக்கடிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் தொடங்கும். நீங்கள் நினைத்த காரியத்தை சாதிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).