இரண்டாவது திருமணம் குறித்து ஓபனாக பேசிய மேக்னா ராஜ்! என்ன முடிவு எடுத்திருக்கிறார் தெரியுமா?
மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ்
பிரபல கன்னட நடிகர் சுந்தரின் மகளான மேக்னா ராஜ், பல மொழி படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் நடிகர் அர்ஜுனின் உறவிரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜுன் மாதம் 7ம் தேதி மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி உயிரிழந்தார்.
கணவர் இறந்த போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜ், பின்பு கணவரின் பிரிவிலிருந்து வெளிவந்த நிலையில், ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
குறித்த குழந்தையைப் பார்த்து தனது கணவனே தனக்கு பிள்ளையாக வந்து பிறந்திருப்பதாக கூறி நெகிழ்ச்சியடைந்தார்.
மீண்டும் நடிக்கும் மேக்னா
சமீபத்தில் படங்களில் நடித்து வரும் இவரிடம், நேர்காணல் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மேக்னா, “சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகிறார்கள், சிலரோ வேண்டாம் என்கிறார்கள். நான் இன்னும் அதுபற்றி முடிவெடுக்கவில்லை.
இரண்டாவது திருமணம் குறித்து நான் எந்த முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி எப்போதும் என்னுடன் இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட எனது குழந்தையின் எதிர்காலம் தான் முக்கியம். அதைப் பற்றி மட்டுமே நான் சிந்தித்து வருகிறேன்.
எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே எனக்கு இருக்கும் ஆசை” என கூறியுள்ளார்.