யாழ். சின்னமடு மாதா யாத்திரைத்தலம்- பலரும் அறியாத வரலாற்று தகவல்கள்
யாழ். மறைமாவட்டத்தின் பேர்பெற்ற யாத்திரைத் தலங்களுள் சின்னமடுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த திருத்தலத்தின் யாத்திரை கடந்த 1895 ம் ஆண்டு ஆடி மாதம் 14-ந் திகதி ஒரு சிறு கொட்டிற் கோவிலில் முதற்திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதென வரலாறு கூறுகின்றது.
போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாண நகருக்கு எதிர்ப்புறம் உள்ள தணத்தீவு மிலேச்ச அரசனால் 2ம் ஆண்டு புதுமை மாதா குழுக்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்த செம்பேடு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தின் யாத்திரை கட்டளைச் சட்டத்தின் கீழ் யாத்திரைத் தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெரியமடு மாதாவின் திருச்சேத்திரத்துக்கு யாத்திரை போக முடியாத பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சின்னமடுமாதாவின் திருத்தலம் வந்து அன்னையை வழிபட்டுச் செல்வார்கள்.
திருச் சுரூபம் வைக்கப்பட்ட பின் 1895 ம் ஆண்டு ஆடிமாதம் 14- ம் திகதி முதற் பூசைப்பலி இந்தக் கொட்டிற்கோவிலில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு ஆவணிமாதம் 4 ம் திகதி இரண்டாவது திருப்பலி செலுத்தப்பட்டது.
அந்த வகையில், சின்னமடு மாதா ஆலயம் பற்றி ஏகப்பட்ட சிறப்புக்கள் உள்ளன. இது தொடர்பான பூரண வரலாற்றை எமது காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
