வைரமுத்து போல் வாழ்க... நெட்டிசன் கூறிய பதிலுக்கு சின்மயின் மீண்டும் ஆவேசமான பதிலடி!
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார். 8 ஆண்டுக்கு பின் குழந்தை பிறந்த சந்தோஷத்தை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றீர்கள் எனவும், வைரமுத்துவை ஒப்பிட்டும் பதிவிட்டு வந்தனர்.
அதற்கு சின்மயி ஆவேசமாக பல பதில்களை கூறி வந்தார். மேலும், சமூக வலைதளம் வாயிலாக பெண்களை யாராவது இழிவுபடுத்தினாலோ, அல்லது அத்துமீறி கமெண்ட் செய்தாலோ போல்டாக பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், நெட்டிசன் ஒருவர் “வைரம் முத்து போல இன்று போல் என்றும் புகழோடு வாழ்க வளமுடன்” என பதிவிட்டு இருந்தார். இதைக்கண்டு மீண்டும் கடுப்பான சின்மயி, அவருக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.
அதில், “கடந்த 4 நாட்களாக நான் பாத்த பல கமென்ட்ஸ் இப்படித்தான். இந்த பொறுக்கிதனமான கலாசாரம் முற்போக்கு பெண்ணியம்னு பேசிற இந்த கேவலமான மக்கள்ட மட்டும்தான். வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும். அப்ப புரியுமோ என்னவோ” என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக நான் பாத்த பல கமென்ட்ஸ் இப்படித்தான்.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 24, 2022
இந்த பொறுக்கிதனமான கலாசாரம் முற்போக்கு பெண்ணியம்னு பேசிற இந்த கேவலமான மக்கள்ட மட்டும்தான்.
வைரமுத்து போன்றவங்க உங்க வீட்டு கதவ தட்டட்டும். அப்ப புரியுமோ என்னவோ. https://t.co/vqDj1MmH2F