குழந்தைக்கு காரணம் வைரமுத்து என நினைச்சுட்டீங்களா? நெட்டிசன் கூறிய பதிலுக்கு சின்மயி ஆவேச பதில்
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார். 8 ஆண்டுக்கு பின் குழந்தை பிறந்த சந்தோஷத்தை இணையத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அதற்கு நெட்டிசன்கள் பலரும் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றீர்களா என கேள்வியை எழுப்பி வந்தனர். அதற்கு சின்மயி உருக்கத்துடன் மறுத்து பதிவையும் வெளியிட்டு இருந்தார்.
மேலும் பல மோசமான கமெண்ட்ஸ்களுக்கு சின்மயி பதிலடி கொடுத்து வந்தார். 30 வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என கூறியிருந்தார்.
தற்போது நெட்டிசன் ஒருவர் வைரமுத்துவை ஒப்பிடுவதைப்போல், வைரம் மற்றும் முத்து சொன்னது அக்கா வைரமுத்து நினைச்சிட்டாங்க போல, எப்போ பாரு அதே நினைப்பு என நக்கலடித்துள்ளார்.
அதற்கு சின்மயி காட்டமாக, அவரை போலவே உங்கள் வீட்டில் பிள்ளைகள் பிறக்கட்டும், அவர் நினைப்பாகவே இருக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு சின்மயிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வைரலாகவும் பரவி வருகிறது.