20 வருடமாக அவதி... ஸ்கேன் ரிப்போர்டில் இளைஞருக்கு ஏற்பட்டிருந்த மாதவிடாய்! ஆடிப்போன மருத்துவர்கள்
இளைஞர் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் அவருக்கு கருமுட்டை இருப்பது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சீனா நாட்டின் சிசுவான் பிராந்தியத்தை சேர்ந்த 33 வயதுடைய நபருக்கு 20 வருடங்களாக சிறுநீரக சிக்கல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவரின் உடல் நலம் கடுமையான பாதிப்பை சந்திக்க சாதாரண தொற்றாக தான் இருக்ககூடும் என மருத்துவமனையை நாடி இருக்கிறார்.

பெண் பாலினம்
அப்போது பரிசோதனையின் போது தான் பெரிய ஆச்சரியமே.. 20 ஆண்டுகளாக சந்தித்து வந்த பிரச்சினையில், ஸ்கேன் செய்த போது அவருக்கு பெண் பாலினத்தின் க்ரோமோசோம்கள் உடலில் உள்ளதாகவும்.
எனவே, இவருக்கு கருமுட்டை, கருப்பை போன்ற உறுப்புகள் உடலில் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறி ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
அரிதான விஷயம்
இந்த அரிதான மருத்துவத்தன்மை கொண்டவர்களுக்கு அவர்களின் பாலினம் மட்டுமல்லாது எதிர் பாலினத்தின் க்ரோமோசோம்கள் மற்றும் உறுப்புகளும் இருக்குமாம்.
இதன்பின்னர், தனது உடலில் உள்ள பெண் உறுப்புகளை அகற்றுமாறு மருத்துவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த இளைஞர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. 3 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் இளைஞர் உடலில் இருந்த கருமுட்டை மற்றும் கருப்பை ஆகியவற்றை நீக்கியிருக்கிறார்கள்.
மேலும், 10 நாள் சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த சிகிச்சை காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம் எனத் தெரிவித்திருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து அந்த இளைஞருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.