China Robot Mall: உலகின் முதல் மனித உருவ ரோபோ கடை: தொழில்நுட்பத்தில் பட்டையை கிளப்பும் சீனா!
சீனாவில் உலகின் முதல் பிரத்யேக மனித உருவ ரோபோ கடையாக "ரோபோ மால்" திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ மால் வாடிக்கையாளர்களுக்கு 40 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிராண்டுகளின் ரோபோக்கள், செல்லப்பிராணிகள், இயந்திரங்களை ஆராயவும் வாங்கவும் வாய்ப்பளிக்கிறது.
சீனாவில் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்த கடையின் ஒரு பகுதி ஷோரூம், ஒரு பகுதி டீலர்ஷிப் மற்றும் ஒரு பகுதி கண்காட்சியாகும் பிரிக்கப்படுள்ளது.
இங்கு அனைத்தும் ரோபோ மயம்
வாடிக்கையாளர்களை வாழ்த்துவது மற்றும் மொழித் திறன்களை வெளிப்படுத்துவது முதல் பொருட்களைத் தூக்குவது மற்றும் எடுத்துச் செல்வது வரை பல்வேறு பணிகளை ரோபோக்கள் செய்வதை பார்வையாளர்கள் இங்கு காணக்கூடியதாக இருக்கும்.
இந்த நான்கு மாடி ரோபோ மால், 4,000 சதுர மீட்டருக்கு மேல், ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோபோட்டிக் தீம் குறித்த ரோபோ மாலுக்கு செல்லும் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்கள் ரோபோட்டிக் தீம் ரெஸ்ட்டாரண்டில், சில ரோபோக்கள் சமைக்க, சில ரோபோக்கள் பரிமாற, சாப்பிட்டப்படியே ரோபோக்களின் ராக் இசைக்கச்சேரியை கேட்க்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
மேலும் குழுவாக நடனமாடும் ரோபோக்களை கண்டு ரசிப்பதுடன் சிறிய ரக ரோபோ நாயுடனும், செஸ் விளையாடும் ரோபோக்களுடனும் விளையாடலாம். இங்கு பார் அட்டெண்ட்டர்கூட ரோபோ தான் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |