போன் ஹேங் ஆவதை சரிசெய்வது எப்படி? எளிய வழிகள்
பொதுவாகவே தற்காலத்தில் மொபைல் போன் இல்லாமல் ஒரு நாளை கூட கடத்த முடியாத நிலை உருவாகிவிட்டது. அந்தளவுக்கு மொபைல் போன் அனைவரினது வாழ்விலும்,முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
முக்கியமான நேரங்களில் போன் திரை செயலிழந்துவிட்டால், அந்த வேலையே பாலாகிவிடும். இது போன்ற அனுபவங்கள் நம்மில் சிலருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
போனின் திரை செயலிழப்பு
தொலைபேசித் திரை பெரும்பாலான நேரங்களில் அப்படியே செயலிழந்துவிடும். அப்படியான நிலை தான் (Frozen) உறைதல் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக நீங்கள் முக்கியமான ஏதாவது வேலையில் இருக்கும்போது. இவ்வாறு போனின் திரை நின்று அல்லது உறைந்து போனால், போனை கையாள்வது மிகவும் வெறுப்பான அனுபவத்தை ஏற்படுத்தும்.
நீண்ட காலத்துக்கு ஒரே மொபைல் போனை பயன்படுத்தும் போதும், போனில் பேட்டரி முடிவடையும் நிலையிலும் இவ்வாறு போனின் திரை அடிக்கடி செயலிழக்கும் நிலை ஏற்படக்கூடும். இதற்கான சிறந்த மற்றும் எளிமையான சில தீர்வுகள் குறித்து இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.
எளிமையான தீர்வுகள்
பெரும்பாலும், மொபைல் போனின் திரை அடிக்கடி செயலிழப்பதற்கு, மென்பொருள் கோளாறுகள், போதுமான நினைவகம் அல்லது முரண்பட்ட பயன்பாடுகள் போன்றன முக்கிய காரணங்களாக இருக்கலாம்.சில நேரங்களில், வன்பொருள் சிக்கல்கள் கூட திரை உறைவதற்கு காரணமாக இருக்கும்.
உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் (Restart) செய்வது செயலிழந்த திரையை மீண்டும் உடனடியாக சீர் செய்ய உதவும். இது ஒரு எளிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் ஒரு எளிய மறுதொடக்கம் மொபைல் போனை சீராக இயங்க வைக்கும்.
சாதனம் மறுதொடக்கம் செய்யும் வரை பவர் பட்டனை அழுத்திப் பிடிக்கவும். இந்த செயல் இயங்கும் அனைத்து பயன்பாடுகளையும் உடனடியான மூடி தற்காலிக கோப்புகளை அழிக்கும், இதனால் உறைதல் சிக்கல் சரியாகிவிடும்.
நீக்கக்கூடிய பேட்டரிகளைக் கொண்ட சாதனங்களுக்கு, பேட்டரியை அகற்றுவது ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும். அவ்வாறு பேட்டரியை அகற்றிய பிறகு, சில வினாடிகள் காத்திருந்து, அதை மீண்டும் பொருத்தி இயக்கும் போது சீராக செயற்படும்.
உங்கள் சாதனம் வழக்கமான மறுதொடக்க முயற்சிகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் கட்டாய மறுதொடக்கத்தைச் செய்யலாம்.இது மொபைல் போன்கனின் மாதிரியை பொறுத்து மாறுபடும்.
போன் வாங்கும் போது கொடுக்கப்படும் கையேட்டில் இது தொடர்பான தகவர்கள் இருக்கும் அல்லது உங்கள் போன் மொடல்களுக்கு ஏற்றவாறு ஆன்லைனில் தேடியும் தகவல்களை பெறலாம்.
தற்காலிக சேமிப்பில் உள்ள தரவு காலப்போக்கில் குவிந்து, செயலிழப்பு உள்ளிட்ட செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். கேச் பார்ட்டிஷனை டெலிட் செய்வது உங்கள் சாதனத்தின் அமைப்பைப் புதுப்பிக்கவும் விரைவாக இயங்கவும் உதவும்.
பிரச்சனைக்குரிய ஆப்ஸைகளையும் தேவையற்ற ஆப்களையும் அன்இன்டால் செய்யலாம் இதன் முலம் திரை உறையும் பிரச்சினைக்கு முடிவுக்கட்டலாம்.
சில நேரங்களில் தொலைபேசியின் பேட்டரி தீர்ந்து போகும் நிலையில் திரை செயலிழந்துவிடும். அப்படிப்பட்ட நிலையில், அதை சார்ஜருடன் இணைக்க வேண்டும். சில நிமிடங்கள் விட்டுவிட வேண்டும் பின்னர் ஆன் செய்தால் சீராக இயங்கும்.
மேலே உள்ள தீர்வுகள் சிறிய சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்றாலும், அடிக்கடி இவ்வாறு திரை உறையும் பிரச்சினை இருந்தால், உரிய முறையில் போனை தொழில்முறை வல்லுணர்களிடம் கொடுத்து திருத்துவது சிறப்பு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |