Viral Video: தாய் அன்புக்கு நிகர் ஏதுமில்லை... கண்ணீர் வரவழைக்கும் உணர்ச்சிமிகு வீடியோ காட்சிகள்
உலகில் தாய்மைக்கு நிகர் எதுவுமேயில்லை. அது மனிதர்களுக்கு மாத்திரமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும். ஆறறிவு படைத்த மனிதர்களுக்குத்தான் அன்பு, பாசம், தாய்மையுணர்வு போன்றன இருக்கும் என்று எண்ணுவது தவறு.
விலங்குகளுக்கும் அது கண்டிப்பாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக சேட்க்விக் நாட்டில் மிருகக்காட்சிசாலையொன்றில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே சிம்பன்சி குரங்குகள் அதிகமாக உணர்ச்சிவசப் படக்கூடியவை.
சந்தோஷம்,துக்கம்,கோபம் என மனிதர்களுக்கு உண்டான அனைத்தும் அவற்றுக்கும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் குடும்பம் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள் அவற்றுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
அண்மையில் சிம்பன்சி குரங்கொன்று குட்டியொன்றை ஈன்றெடுத்துள்ளது. அந்த குட்டிக்கு ஒட்சிசன் வீதம் மிகவும் குறைந்திருந்ததால், தாய் குரங்கிடமிருந்து பிரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த தாய் குரங்கானது தனது குட்டி இறந்துவிட்டதாக எண்ணியிருந்தது. ஆனால், 48 மணிநேரத்துக்கு பின்னர் இறந்துவிட்டதாக எண்ணிய தனது குட்டியை தாய் குரங்கானது கண்ணுற்றது. அந்தக் குட்டியை வாரி அணைத்துக் கொண்டது.
தாய் குரங்கும் குட்டியும் ஒன்று சேர்ந்துவிட்டன. ஆனால், ஒரு சோக சம்பவம் என்னவென்றால் தனது தாயுடன் சேர்ந்த அந்த சிம்பன்சி குட்டியானது 5 வாரங்களின் பின்னர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
எது எவ்வாறெனினும் விலங்குகளாக இருந்தாலும் தாய் என்பவள் தாய் தான். சிம்பன்சி குரங்கின் பாசத்தையும் தாய்மையையும் வெளிக்காட்டும் இந்த வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.