ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய மாணவன்... பாராட்டி வரும் நெட்டிசன்கள்
ஆந்திராவில் 10ம் வகுப்பு மாணவன் ஆக்சிஜன் சிலிண்டருடன் பொதுத்தேர்வு எழுதியுள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டருடன் பரீட்சை
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் கௌசிக் என்ற மாணவன் கடுமையான நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கௌசிக் 10ம் வகுப்பு படித்து வருகின்றார். இவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாணவனின் நுரையீரல் தொற்றுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிகிச்சைக்கான செலவு 50 லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் தேர்வு அறையில் அமர்ந்து பரீட்சை எழுதியுள்ள மாணவனின் தைரியம், மன உறுதி அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மட்டுமே சிறுவனால் சுவாசிக்க முடியும் என்பதால், அதனை பொருத்திக் கொண்டு, தேர்வு எழுதியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதி கிடைப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |