ஆண்களே ஜாக்கிரதை! கோடைக்காலங்களில் குளிர்ச்சியான பீர் குடித்தால் என்ன நடக்கும்?
பொதுவாக கோடைக்காலத்தில் நாம் நினைத்ததிற்கு மேலாக நீர்ச்சத்துக்கள் இழப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்படும் இழப்புகளால் கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கோடைக்காலங்களில் ஏற்படும் சிக்கல்
இந்த பிரச்சினைகளால் காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படுவதுடன், காய்ச்சல், சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் என பல நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனை எவ்வாறு தடுப்பது என அனைவரும் யோசித்து கொண்டிருப்போம்.
அந்த வகையில் கோடைக்காலங்களில் இருக்கும் போது நீர்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
image - Times of India
அத்துடன், குளிர்பானங்கள், வெயிலில் நிறைய நேரம் இருத்தல், இளநீர் அதிகம் எடுத்து கொள்ளுதல் போன்றவற்றை தவிர்த்தல் கட்டாயமாகும்.
இதனை தொடர்ந்து கோடைக்காலங்களில், ஜில் பீர் குடிப்பது ஆபத்தா? இல்லையா? என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
உயிரை காவு வாங்கும் ஜில் பீர் பழக்கம்
கோடைக்காலங்களில் வெயிலில் வேலைக்கு செல்பவர்கள், அந்த சூட்டை தாங்க முடியாமல் மதுபானக்கடையில் தான் நிறைந்து இருப்பார்கள். இதற்கு வெப்பநிலையை ஒரு காரணமாக கூறுவார்கள்.
மேலும் பீர், மற்றும் மதுபானங்களை அடிக்கடி எடுத்து கொள்பவர்கள் “ஹீட் ஸ்ட்ரோக்” ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கான ஆபத்து கூடஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு மது அருந்துவதால் ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவு வெளியேறுகின்றது.
image - ThetravelShorts
இதனை தொடர்ந்து போதையில் தாகம் என்ற ஒன்று மறந்தும் கூட ஏற்படாது. இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகள் சரியாக நாளங்களுக்கு போய் சேராது. ஆனாலும் நீர்ச்சத்துக்கள் வெளியேறிக் கொண்டு தான் இருக்கும். இந்த செயற்பாட்டினால் இரத்த நாளங்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இதய பாதிப்பு அதிகரிக்கும். இதனை தடுக்க வேண்டும் என்றால் கோடைக்காலங்களில் மறந்தும் கூட ஜில் பியர்களை எடுத்து கொள்ள வேண்டாம். மேலும் மற்றைய மதுபானங்களும் இது போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும்.