குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியை தடுக்க என்ன செய்யவேண்டும்?
குளிர்காலம் வந்துவிட்டாலே உடலில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதில் காய்ச்சல், சுவாச பிரச்சனைகள், வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் அடங்கும். பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு குளிர்காலம் கடினமாக இருக்கும்.
மேலும், குளிர் சீசனில் பலருக்கு வரும் எதிர்பாராத பிரச்சனைகளில் ஒன்று குளிர்கால தலைவலி. அந்த தலைவலியான ஐஸ்கிரீம் தலைவலி (ice-cream headache) அல்லது மூளை உறை தலைவலி (brain-freeze headache) என்றும் அறியப்படுகிறது.
இதுபோன்ற தலைவலியை தடுக்க குளிர்காலத்தில் தலையை நனறாக கவர் செய்து கொள்ள வேண்டும் என்று நம் பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், சில நேரங்களில் நீரிழப்பு, உணவுமுறை போன்ற மற்ற காரணிகளும், காற்றழுத்தத்தின் அதிகரிப்பு மற்றும் சூரிய ஒளியின் கால அளவு குறைவதால் ஏற்படும் வெப்பநிலையில் சரிவு உள்ளிட்டவை கூட இது போன்ற தலைவலியை மோசமாக்கும்.
இதற்கு, குளிர் வறண்ட காற்று, நீரிழப்பு, தூக்க நடைமுறைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் கொண்ட சூப்கள் உள்ளிட்ட உணவுகளை நாடுவது சில நேரங்களில் குளிர்கால தலைவலிக்கு காரணமாக இருக்ககூடும். பின் பகலில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் சிலருக்கு ஸ்ட்ரஸ் தலைவலி உருவாகும்.
பகல் நேரத்தில் வெளிச்சம் குறிவைத்து சிலருக்கு மனநிலையில் சோகத்தைத் தூண்டி இந்த தலைவலி ஏற்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆரோக்கியமான உணவு, உடலை சீரான வெப்பநிலையில் வைத்து கொள்வது, நல்ல நிம்மதியான உறக்கம், அதிகப்படியான காஃபின் நுகர்வை தவிர்ப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்வது தலைவலிகளை தடுக்கலாம்.