இரும்பு கதவில் மாட்டிக்கொண்ட சிறுவன்... அண்ணன் செய்த துணிச்சலான காரியம்
இரும்பு கதவில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராமல் மற்றொரு சிறுவன் மீது விழுந்த போது அண்ணன் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார்.
பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் வாசலில் இருக்கும் இரும்பு கதவில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பெற்றோர்கள் என்னதான் கூறினாலும் அதனை காதில் வாங்கிக்கொள்வதில்லை.
இங்கும் இரண்டு சிறுவர்கள் இரும்பு கதவில் விளையாடியுள்ளனர். அதில் ஒரு பக்கம் இருக்கும் கதவு எதிர்பாராத விதமாக சிறுவன் மீது விழுந்துள்ளது.
உடனே பக்கத்தில் விளையாடிய சகோதரர் அந்த கதவினை தூக்குவதற்கு முயற்சித்துள்ளான். தூக்க முடியாத நிலையில், யாரையாவது உதவிக்கு அழைப்பதற்கு சென்றுள்ளார்.
ஆனால் யாரும் இல்லாத காரணத்தில் உடனே நேரம் தாமதிக்காமல் தானே அந்த கதவினை தூக்கி சகோதரனை காப்பாற்றியுள்ளார். இந்த காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இம்மாதிரியான இரும்பு கதவுகளில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர் கண்டித்து தவிர்க்க வேண்டும். இக்காட்சி ஒரு அனைவருக்கும் விழிப்புணர்வு காட்சியாக அமைந்துள்ளது.
Bro's adrenaline peaked 🔥🥶 pic.twitter.com/jARGhkcmlB
— Shivam. (@ShivamHere_56) August 5, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |