தாயம் விளையாட்டும்... தமிழர்களின் அறிவியல்பூர்வமான பண்பாடும்! பலருக்கும் தெரிந்திடாத உண்மை
தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!
அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்! தாயம் உருட்டும் போது ஒன்று விழுந்தால் அது தாயம்.
5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா?
தாயம் (1) சூரியனை குறிக்கும்.... சூரியனே பிரபஞ்சத்தின்ஆதாரம்.
5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும்... நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி
6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் ஆறு பருவங்களையும் இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி என்ற காலங்களை குறிக்கும்.
12 ம் எண் 12 இராசிகளையும், 12 மாதங்களையும் குறிக்கும்.
இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்.
அதேபோல் 2ம் எண் இரண்டு அயனங்களான உத்ராயனம், தட்சிணாயனம் இதனைக் குறைக்கும்
3ம் எண் முக்குண வேளையை சாத்வீகம், ராஜஸம், தாமஸம் இவற்றினைக் குறிக்கும்.
4ம் எண் நான்கு யோகங்களான அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட என்பதைக் குறிக்கும்.
எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால், அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்.
தற்போது புரிகின்றதா? ஒரு தாயம் விளையாட்டில் முன்னோர்கள் எவ்வளவு அறிவியல்பூர்வமான தகவலை வைத்திருக்கிறார்கள் என்பதை...