Viral Video: மீன் பிடிப்பதற்கு இப்படியும் ஒரு கருவியா? துடிக்கும் மீன்களின் கண்கொள்ளாக்காட்சி
நம்மில் பலரும் மீன் பிடிப்பதற்கு பல கண்டுபிடிப்புகளை செய்து வரும் நிலையில், தற்போது புதிய முறையில் மீன் பிடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
கொத்தாக மாட்டிய மீன்
பொதுவாக மீன் பிடிக்கும் காட்சிகளை நாம் எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த அளவிற்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
அதே போன்று மீன் பிடிப்பதற்கு தூண்டில் அல்லது வலைகளைப் போட்டுதான் மீன் பிடிப்பார்கள். ஆனால் சமீப காலங்களில் வலை மற்றும் தூண்டில் இல்லாமல் சில மனிதர்கள் மீன்களை பிடிக்கும் திறமையினை பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கின்றது.
இங்கும் அப்படியொரு காட்சியினைத் தான் காணப்போகின்றோம். மீன் பிடிப்பதற்கு வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ள கருவி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கையில் குழந்தையுடன் இருக்கும் நபர் மீன் பிடிப்பதற்கு அந்த கருவியை சுற்றுகின்றார். அருகில் மகள் அதனை அவதானித்துக் கொண்டிருக்கும் போது, கொத்தாக மீன்கள் மாட்டியுள்ளது.
This is the first time I've seen a fish trap like this. pic.twitter.com/MvPDrT5wVr
— Ayu D. Palupi (@ayu_DPalupi) August 13, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |