ஹொட்டல் சுவையில் சிக்கன் லாலிபாப்! வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?
இன்று பெரும்பாலான அசைவ பிரியர்களின் அதிகமான தெரிவு சிக்கன் காணப்படுகின்றது. சிக்கன் பல விதமாக சமைக்கப்பட்டு ஆசையைத் தூண்டும் விதமாக ஹொட்டல்களில் காணப்படுகின்றது.
பல விதமாக சமைக்கப்படும் சிக்கன்களில் ஒன்று தான் லாலி பாப். இதனை குழந்தைகள் அதிகமாக விரும்பு உண்கின்றனர்.
கடைகளில் வாங்கும் சிக்கன் வகைகள் பலருக்கும் கெடுதியை ஏற்படுத்தும் நிலையில், வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியமான விடயமே. தற்போது சிக்கன் லாலிபாப் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஃபுட் கலர் - விரும்பினால் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும்.
செய்முறை
சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகு மற்றும் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, புட் கலர் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலி பாப் துண்டுகளை எடுத்து, நன்கு பிரட்டி எடுத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
பின்பு வாணலி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும், சிக்கன் லாலிபாப் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
