Chicken Liver: புரோட்டீனை அதிகப்படுத்தும் சிக்கன் ஈரல்
உலகளாவிய ரீதியில் அதிகமான மக்கள் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் ஒன்று தான் கோழி/சிக்கன்.
மற்ற இறைச்சிகளை விட கோழி இறைச்சியில் கொலஸ்ரோல் அளவு குறைவாக இருக்கும். அத்துடன் சாதாரண மக்கள் வாங்கக் கூடிய அளவு விலையில் விற்கப்படுகின்றது.
வீடுகளில் சிக்கன் வாங்கி சமைக்கும் பொழுது அதன் ஈரலை மாத்திரம் சமைக்க மறுப்பார்கள். ஏனெனின் “கோழி இறைச்சியின் ஈரல் அவ்வளவு நல்லதல்ல” என்ற கருத்து சமூகத்தில் பரவலாக இருக்கின்றது.
மாறாக இது ஒரு கட்டுக்கதை மாத்திரமே. சிக்கனில் உள்ள ஈரல் ஆரோக்கியம் நிறைந்தவை.
இதன்படி, சிக்கனில் இருக்கும் ஈரலை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிக்கன் ஈரல் சாப்பிட்டால் என்ன பலன்?
1. கோழி இறைச்சியில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் ஈரல் சாப்பிடுவது சிறந்தது. ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றது. சிறுவர்களுக்கு சமைத்து கொடுக்கலாம்.
2. எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் கோழி ஈரல் எடுத்து கொள்ளலாம். இதில் புரோட்டீன் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றது. சாப்பிட்டவுடன் விரைவாக பசியை பூர்த்திச் செய்கின்றது.
3. சரும செல்கள், மூளை செல்கள் மற்றும் பிற உடல் திசுக்களை ஆரோக்கியமாக பராமரிக்க தேவையான வைட்டமின் பி கோழி ஈரலில் இருக்கின்றது.
4. இரத்த சோகை அல்லது பிற இரத்த சிவப்பணு பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் ஈரல் சேர்த்து கொள்வது சிறந்தது.
5. பார்வை திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இனபெருக்க மண்டலம் போன்றவைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கோழி ஈரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் சருமம், நகம், தலைமுடி, கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |