மனிதர்களை ஏன் நாய்கள் நாவால் வருடுகிறது தெரியுமா? பலரும் அறிந்திடாத அறிவியல்
பொதுவாக நம் வாழ் நாளில் நிச்சயம் ஒரு நாயை சரி கொஞ்சி மகிழ்ந்திருப்போம்.
அதே போல் நாயும் நம்மை நாவால் கொஞ்சி விளையாடியிருக்கும்.
இதன்படி, விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சும், முத்தம் கொடுக்கும், நாவால் எம்மை நக்கும்.
இப்படி செய்வதற்கு ஒரு அறிவியல் காரணம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பில் பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் காணலாம்.
நாய்கள் ஏன் நாவால் வருடுகின்றன?
1. குட்டி நாய்களை கொஞ்சும் பொழுது அது நம்முடைய கைகளை , விரல்களை நாவால் வருடும். இப்படி செய்து அதற்கு பசிக்கிறது என்பதனை நமக்கு உணர்த்த முயற்சிக்கும். இது போன்ற நேரங்களில் பசியை புரிந்து கொண்டு சாப்பிடுவதற்கு உணவுவை கொடுத்தால் இன்னும் சந்தோசமாக விளையாடும்.
2. சிலர், வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள் அல்லது கடைகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள் இப்படியான நேரங்களில் நாய்கள் ஓடி வந்து மேலே பாய்ந்து எம்மை வருடும். இதற்கான காரணம் அது அந்தளவு நம் மீது பாசம் வைத்திருக்கிறது. அதாவது நாய்கள் அதன் உணர்ச்சியை வெளிகாட்டுவதற்காக இப்படி செய்கிறது.
3. நாய்களின் உடலில் எங்காவது காயம் இருந்தால் அதனை வாயால் வருடிக் கொண்டே இருக்கும். ஏனெனின் நாய்களின் வாயில் இருக்கும் எச்சிலில் பாக்ரீயாக்களை கொல்லும் நொதியம் இருக்கின்றன. இப்படி நாய்கள் செய்து கொண்டிருப்பதை கண்டால் அங்கு ஏதோ இருக்கிறது என்றர்த்தம். இப்படியான சமயங்களில் உரிய மருத்துவரை நாடி சிகிச்சையளிப்பது அவசியம்.
4. மனிதர்களின் வியர்வையில் சுரக்கும் உப்பின் சுவை நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நாய்கள் நம்மை நாவால் வருடும்.
5. சில நாய்கள் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது அதிலிருந்து வெளியே வருவதற்காகவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதற்காகவும் நம்மை வருடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |