றீச்ஷா பண்ணையில் குவிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள்.. நீங்களும் வாங்கலாம்- எப்படி தெரியுமா?
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) கோழிகள் வளர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்படி விற்பனை செய்யப்படுகிறது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த காணொளிகளில் றீச்ஷாவில் காய்கறிகள் மற்றும் மூலிகை பொருட்கள் வளர்த்து அதனை பொதிச் செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை பார்த்திருப்போம்.
தற்போது புதிய முயற்சியாக கோழி பண்ணை ஆரம்பித்து கோழிகளை சுகாதாரமுறைப்படி வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள்.
பண்ணையில் 5000 கோழிக்குஞ்சுகள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சென்று கோழிக்குஞ்சுகளை வாங்கிக் கொள்ளலாம். அதே சமயம், உங்களுக்கு வளர்ந்த கோழிகள் தான் வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில், கோழிக்குஞ்சு வளர்ப்பு பற்றி மேலதிக தகவல்களை காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |