நாவை கட்டிப்போடும் மிளகு சிக்கன் டிக்கா
சிக்கன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
பொதுவாக அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவுப் பொருளாக சிக்கன் காணப்படுகிறது.
அந்த சிக்கனை ஒரே மாதிரியாக குழம்பு மட்டுமே வைத்து உண்ணாமல், விதவிதமாக செய்து சாப்பிடலாமே...
இதோ அருமையான மிளகு சிக்கன் டிக்கா எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி,வெ.பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
தயிர் - 200 மில்லி
பச்சை மிளகாய் விழுது - 4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத் தூள் - 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி, அதில் இஞ்சி,வெ.பூண்டு விழுது, உப்பு சேர்த்து அரை மணித்தியாலம் ஊற விடவும்.
அதன் பின்னர் தயிர் பச்சை மிளகாய் விழுது, பொடித்த மிளவு, உப்பு சேர்த்து கலக்கி ஊற வைத்த சிக்கனுடன் சேர்த்து மறுபடியும் அரை மணித்தியாலம் ஊற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் எண்ணெய் தடவி, ஊற வைத்த சிக்கனை மாத்திரம் தனியாக எடுத்து வேக வைக்கவும்.
சிக்கன் நன்றாக வேகும்வரை திருப்பி திருப்பி விடவும்.
சிக்கன் வெந்ததும் தட்டுக்கு மாற்றி அதில் எலுமிச்சை சாறு விடவும்.
அருமையான மிளகு சிக்கன் டிக்கா ரெடி