சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து குடிங்க! ஏகப்பட்ட அதிசயத்தை கண்கூடாக காணலாம்
வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது.
எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம்.
எலுமிச்சையின் பயன்கள்:
எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது.
கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை கிடைக்கும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடித்தால் அஜீரணக் கோளாறு நீங்கி, நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது.
இரவு நேரத்தில் எலுமிச்சை சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்று நிறைய பேர் கூறுவார்கள். எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல ஒரு உறக்கம் வரும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் மிக சிறப்பாக செயல்படுகிறது. சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தருகின்றது.
குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதியினர் இரவு நேரத்தில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் ஆண், பெண் இருவருக்கும் கருவளத்தை ஊக்குவிக்கும் ஆற்றலை தரும்.