மனைவி வளர்ச்சி மீது ஏற்பட்ட ஈகோ.. இது தான் பிரிவிற்கு காரணமா? விமர்சகர் உடைத்த உண்மை
அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ய போகிறார் என்ற செய்திக்கு விமர்சகர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நட்சத்திர ஜோடி
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளின் ஒருவர் தான் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய். இவர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் இருவரும் அறிமுகமாகி பழக ஆரம்பித்துள்ளனர்.
பழக்கம் முற்றி காதலனான பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு பெற்றாரின் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தற்போது ஆராத்யா எனும் அழகிய மகளும் இருக்கிறார்கள்.
விவாகரத்து சர்ச்சை
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரியப் போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது அபிஷேக் பச்சன் கை விரலில் போட்டிருந்த மோதிரம் இல்லாதது காரணத்தினால் இந்த சந்தேகம் எழுந்து தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
திருமணமாகி 16 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்கள் திடீரென இந்த முடிவிற்கு வர என்ன காரணம் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
செய்யாறு பாலு பேட்டி
இதனை தொடர்ந்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு யூடியூப் சேனல் ஒன்றிற்கு இது தொடர்பிலான விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதாவது, அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து 6 மாதங்களிலேயே ஈகோ பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் வெளியில் செல்லும் போது பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யா ராயிற்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இதன் காரணமாக எழுந்த ஈகோ பிரச்சினையை அமிதாப் பச்சன் பேசி சரிச் செய்து வைத்துள்ளார். பின்னர் மனைவியின் வளர்ச்சியை அபிஷேக் பச்சன் ரசிக்க ஆரம்பித்து விட்டதாக அவரே பேட்டியொன்றில் கூறியிருப்பார்.
மேலும் திருமணத்திற்கு பின்னரும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நெருக்கமாக நடித்து வந்தார். ஆனால் அப்போது இல்லாத இந்த சர்ச்சை ஏன் திடீரென எழுந்தது தெரியவில்லை. மாறாக நெருப்பு இல்லாமல் எங்கும் பூகையாது..” என மறைமுகமாக பேசியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |