ஒரே வாரத்தில் மஞ்சள் பற்கள் வெண்மையாகனுமா? அப்போ இந்த இலைகள் தான் பெஸ்ட் சாய்ஸ்
பொதுவாகவே பெண்களுக்கு பொன் நகையை விட புண்ணகையே சிறந்தது என கூறுவார்கள். உண்மையிவ் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதே தனி அழகு தான்.
ஆனால் இந்த அழகிய புண்ணகையை பாதிக்கும் வகையில் இருக்கும் மஞ்சள் பற்கள் நம்மில் பலருக்கும் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
முறையாக பல் துலக்குதல் இல்லாததாலும், காபி, டீ அதிகமாக குடிப்பதாலும், வயதாவதாலும் பற்களின் நிறம் மாறுகிறது.
ஆனால் இவற்றை அலட்சியப்படுத்தினால் பற்களில் இருந்து ரத்தம் கசிவது, வாய் துர்நாற்றம், பலவீனமான பற்கள் போன்றவை பல்வேறு வாய் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு சிறந்த தீர்வு கொடுக்கும் சில மூலிகை இலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலிகை இலைகள்
மஞ்சள் பற்களை மீண்டும் வெண்மையாக்க வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப இலையில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மையாக்கும்.
வேப்ப இலைகளால் செய்யப்பட்ட பற்பசையும் நல்ல பலனைத் தரும். அதுமட்டுமின்றி, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. வாயில் தங்கியுள்ள கிருமிகளை முற்றாக வேம்பு இலைகள் அழிப்பதனால் உடல் ஆரோக்கியத்துக்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது.
துளசி இலைகளிலும் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. துளசி இலையின் சாற்றை வாய் கழுவி, இலைகளை மென்று சாப்பிட்டால், பற்களில் படிந்திருக்கும் பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கி, வெண்மையாக மாறும்.
புளியிலை அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது .புளியில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
புளி இலையை மென்று சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறுவதை கண்கூடாக அவதானிக்க முடியும். வாயில் உள்ள பாக்டீரியாக்களையும் இது அழிக்கிறது. இது வாய் துர்நாற்றத்திற்கும் சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |