ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் மஞ்சள் : இனிமேல் தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே அனைவரின் சமையல் அறையிலும் இருக்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்றுதான் மஞ்சள். இந்துக்களைப் பொருத்தவரையில் மிகவும் மங்கலகரமான ஒரு பொருளாக மஞ்சள் கருதப்படுகின்றது.
உண்மையில் மஞ்சளை நமது முன்னோர்கள் முதன்மைப்படுத்தி வைத்தமைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
மஞ்சளை நாம் அனைவரும் உணவில் பயன்படுத்துகின்றோம் ஆனால் இன்னும் நம்மில் பலருக்கும் இதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இதன் பயன்கள் குறித்தும் பூரண விளக்கம் இருப்பதில்லை.இது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மஞ்சளின் பயன்கள்
மஞ்சள் ஒரு இயற்கை என்டிபயோட்டிக். நமது முன்னோர்கள் குளிப்பதில் தொடங்கி வாசலில் தெளிப்பது வரை மஞ்சளை பயன்படுத்தியமைக்கு இதுவே காரணம். புற்று நோய்க்கு எதிரானது மஞ்சள் குறிப்பாக மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதனால் தான் ஆரம்ப காலத்தில் மஞ்சளை தாலியாக கட்டும் வழக்கம் காணப்பட்டது. தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுவே காரணம்.
இதனை புரிந்துக்கொள்ளாத பலரும் இன்று தங்க தாலிக்கொடிகளில் தாலியை அணிந்துக் கொண்டு தங்களின் அறியாமையை கௌரவமாக நினைக்கும் அவல நிலை காணப்படுகின்றது.
மேலும் மஞ்சள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்க உதவும். மஞ்சள் இதய நோய் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கொழுப்பின் அளவை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருள் இருப்பதால், இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது.
உடல் உடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினசரி வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது சிறந்த தீர்வு கொடுக்கும். இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மஞ்சள் பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |