பிஞ்சு குழந்தைகளை வேட்டையாடிய காமுகன்: செல்போனை கண்டு மிரண்ட பொலிஸ்
சென்னையில் கள்ளக்காதலியின் குழந்தை மட்டுமின்றி பக்கத்து வீட்டு சிறுமிகள் என 5 குழந்தைகளை வன்கொடுமை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அண்ணாநகர் கிழக்கு, ஆர்விநகரை சேர்ந்தவர் பெருமாள்(48).. ஜூஸ் கடை வைத்துள்ள இவரது கடைக்கு ஷீலா(30) என்ற பெண் ஜுஸ் குடிக்க அடிக்கடி வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கு பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். மேலும் ஷீலாவிற்கு 9 வயது குழந்தை இருக்க அவர் மீதும் பெருமாளுக்கு ஆசை ஏற்பட அக்குழந்தையையும் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தனது செல்போனில் படம் எடுத்துவைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மிரட்டி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். நாளடைவில் ஷீலாவிற்கு தெரியவரவே, பெருமாள் அடிக்கடி அவருக்கு பணம் கொடுப்பதால் அவரும் இதனை பெரிதாக கண்டிக்காமல் விட்டுள்ளார்.
இந்நிலையில், ஷீலாவின் வீட்டிற்கு அவரது தங்கை மாலாவும் அவரது 4 வயது குழந்தையும் வந்துள்ளனர். அப்பொழுது மாலாவிற்கும், பெருமாளுக்கு தொடர்பு ஏற்பட்டு இருந்த நிலையில் அவரது 4 வயது குழந்தைக்கும் வன்கொடுமை தொல்லை தந்துள்ளார். இதனையும் மாலா கண்டும் காணாமலும் இருந்துள்ளார்.
இது மட்டுமின்றி பக்கத்து வீட்டு 11 வயது சிறுமியையும் பெருமாள் மிரட்டி வன்கொடுமை செய்யவே விஷயம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பெருமாள் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்த பொலிசார் அவரது, செல்போனை ஆய்வு செய்த மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம் குழந்தைகளின் ஆபாச காணொளி அதிகமாக சேமித்து வைத்துள்ளார்.
பெருமாள் மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்த ஷீலா மற்றும் மாலாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அடிக்கடி இந்த இரண்டு பெண்களுக்கும் 500 முதல் 2000 ரூபாய் கொடுத்து வந்ததால், மகளை வன்கொடுமை செய்வதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.
"பிஞ்சுகளை நாசம் செய்தவனை ஜாமீனில் கூட விடாதீங்க.. அதுக்கு உடந்தையாக இருந்த 2 தாய்மார்களையும் வெளியே விடாதீங்க" என்று கொந்தளித்து வருகின்றனர் பொதுமக்கள்.