இரு கைகளில் இரு பியானோ வாசித்து வெளிநாட்டவர்களை வியக்க வைத்த தமிழன்! யார் இந்த லியன் நாதஸ்வரம்;
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இரு கைகளிலும் இரு பியானோ, இரு இசைகளை வாசித்து உலகையே வியக்கவைத்த தமிழகத்தின் இளம் இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பலரும் பாராட்டி வருகின்றனர்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்துள்ளது. கோலகலமாக நடைப்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
வியக்க வைத்த தமிழன்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர் பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், ஒரே சமயத்தில் இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து அரங்கில் குழுமியிருந்த வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்தினார்.
அதுமட்டுமின்றி, இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டும் இசையமைத்து அசத்தினார். உலகமே வியந்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம், ஏற்கனவே உலகை வியக்க வைத்தவர்.
யார் இந்த லிடியன் நாதஸ்வரம் என்று பார்ப்போம். தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷ் என்பவரின் மகன் தான் லிடியன். இசை குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே அவருக்கு இசை வந்தது. 2 வயதிலேயே சைலஃபோனை வாசிக்க ஆரம்பித்த லிடியனின் இசை திறமையை பார்த்த அவரது தந்தை அவருக்கு இசை கருவிகளை வாங்கி கொடுத்து வாசிக்க வைத்துள்ளார்.
மேலும், பிரபல பியானோ இசை கலைஞர் அகஸ்டியனிடம் முறையாக பியானோ கற்ற லிடியன், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தார். The World's Best என்ற சர்வதேச அளவிலான போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்ததுடன், இரு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து அசத்தினார்.
ஒரு நிமிடத்தில் 325 பீட்களை வாசித்து சாதனை படைத்தார். உலகையே தனது இசையால் வியக்கவும் மகிழவும் வைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையே வியக்க வைத்தார் இந்த சிறுவன் லிடியன்.