அடர்த்தியான பளபளப்பான கூந்தல் வேண்டுமா? இந்த 3 பொருள் இருந்தா போதும்
இப்போது இருக்கும் பெண்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை தலைத்தோங்கி இருக்கின்றது. இதனால் பலரும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த பொருட்கள் எல்லாம் முடியை பளபளப்பாக்கவே அல்லது வளர்ச்சியை தூண்டவோ உதவாது. எமக்கு ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் முதலில் கூந்தலின் தேவை அறிந்து அதற்குரிய ஊட்டச்சத்தை கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுக்கும் போது தான் முடி நாம் நினைத்தது போல அடர்த்தியாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் வளரும். அதற்கு என்ன உதவியாக இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பளபளப்பான கூந்தலுக்கு
கற்றாழை - கற்றாழையில் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றது. இவை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரிசெய்ய கூடிய புரோட்டியோலிடிக் என்சைம்களை கொண்டுள்ளன.
எனவே கைகளை நன்றாக கழவிட்டு கற்றாழையை எடுத்து அதன் ஜெல் பகுதியை கைளால் எடுத்து உச்சந்தலையில் கைகளை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
இது குறைந்தது 15 நிமிடங்கள் செய்தால் போதும். பின்னர் சாதாரண தண்ணீரை கொண்டு கழுவினால் முடி உலர்ந்ததும் மிகவும் பளபளப்பாக இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதைச் செய்து பயன் பெறலாம்.
வெங்காயம் - வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள். இதில் கூந்தலுக்கு நன்மை தரும் ஏனைய விடயங்கள் உள்ளது. இதில் உள்ள உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலைமுடியிலிருந்து பொடுகை நீக்குகின்றன.
இதனால் தலைமுடி ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சி எடுக்கும். இதனால் முடி அடர்த்தியாகும்.
எனவே வெங்காயச் சாற்றைக் கொண்டு முடியை லேசாக மசாஜ் செய்து, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு புதிய நீரில் முடியைக் கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யுங்கள் முடி அடர்த்தியாகுவதை உணரலாம்.
செம்பருத்தி - நம் எல்லோருக்கும் தெரியும் செம்பருத்தி தலைமுடி பராமரிப்பிற்கு மிகவும் உகந்த பூ என்பது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் கூந்தலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்தை கொடுக்கின்றன.
இதன் காரணமாக முடி சரியாக வளரும் மற்றும் முடி பளபளப்பாக இருக்கும்.இதற்கு செம்பருத்தி பூ மற்றும் அதன் இலைகளை நசுக்கி தலைமுடியை லேசாக மசாஜ் செய்யவும்.
சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |